Connect with us

அட்டப்பூச்சியாம்!.. பிக் பாஸ் போட்டியாளருடன் மீண்டும் சந்திப்பை போட்ட ஃபயர் ஹீரோயின்!..

latest news

அட்டப்பூச்சியாம்!.. பிக் பாஸ் போட்டியாளருடன் மீண்டும் சந்திப்பை போட்ட ஃபயர் ஹீரோயின்!..

பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற ரச்சிதா மகாலட்சுமி மற்றும் ஷிவின் பல நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ள புகைப்படங்களை நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இளவரசி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

ரச்சிதா உப்புக்கருவாடு என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி எக்ஸ்ட்ரீம், மற்றும் ஃபயர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஃபயர் படத்தில் அவரின் கவர்ச்சியான நடிப்பிற்காக அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. சில சர்ச்சைகளும் கிளம்பினாலும், அதன் மூலம் ரச்சிதாவிற்கு தனி ரசிகர் பட்டாலமே உருவானது. பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ள ரச்சிதா தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், தமிழில் ஸ்ரீகாந்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் இப்படம் உருவாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 91 நாட்களை கடந்து சென்றார். அந்த சீசனில் அவருடன் பயணித்த ஷிவினுடன் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அட்டப்பூச்சியும் பட்டாம்பூச்சியும், பல நாட்களுக்கு பிறகு சேட்டை தொடர்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். கடைசியில் ஷிவினை அட்டப்பூச்சி எனக் கலாய்த்துள்ளார் ரச்சித்தா மகாலட்சுமி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top