Connect with us

Cinema News

தாத்தா தவறி கூட அத சொன்னதில்ல.. சிவாஜி பற்றி விக்ரம் பிரபு சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு இவரை தவிற வேறு யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இவருக்கு என ஒரு தனி அங்கீகாரமே கொடுத்திருக்கின்றனர். இப்போது வரைக்கும் மற்ற மொழி சினிமாக்களும் சிவாஜி கணேசனை கொண்டாடி வருகின்றனர்.

இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை. ஒவ்வொரு கேரக்டருமே மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகத்தான் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் சிவாஜி பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு சிவாஜி கணேசனை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சிவாஜி கணேசன் இறந்த சமயத்தில் விக்ரம் பிரபு ஊரிலேயே இல்லையாம். படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டாராம்.

அதனால் அவரால் வரமுடியவில்லையாம். சிவாஜி கணேசனை பற்றி பிரபு கூறும் போது ‘ஏலே.. உங்க தாத்தா ஆலமரம் மாதிரி. அதிலிருந்து வருகிற ஒரு குச்சியின் விரல்தான் நான், நீ எல்லாம்’ என்று விக்ரம் பிரபுவிடம் அடிக்கடி கூறுவாராம். அதனால் சிவாஜி செய்ததில் கால்வாசியாக நாம பண்ண வேண்டும் என்றுதான் விக்ரம் பிரபு நினைத்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையே கிடையாதாம் விக்ரம் பிரபுவுக்கு.

அசிஸ்டெண்ட் டைரக்டராகத்தான் இருந்திருக்கிறார். கும்கி படத்தின் கதையை படித்து பார்த்து பிடித்து போக பிரபுசாலமனிடம் நடிக்கிறேன் என்று சொன்னாராம் விக்ரம் பிரபு, இது பிரபுவுக்கே தெரியாதாம். பிரபுவிடம் இருந்ததை விட தாத்தா சிவாஜி கணேசனிடம்தான் தன் நேரத்தை செலவிட்டாராம் விக்ரம் பிரபு. ஏனெனில் அந்த நேரம் பிரபு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம்.

vikramprabhu

vikramprabhu

சிவாஜி ஓய்வு எடுத்த நேரம். ஆனால் சிவாஜியுடன் இருந்த வரைக்கும் ஒரு போதும் சிவாஜி ‘ நீ நடி’ என ஒரு போதும் சொன்னதே இல்லையாம் விக்ரம் பிரபுவிடம் . ஆனால் பக்கத்தில் உட்கார வைத்து படங்களை பார்க்க வைப்பாராம். அதுவும் ஆங்கில ஆக்‌ஷன் படங்களைத்தான் பார்க்க வைப்பாராம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top