மீண்டும் இணைந்த சூர்யவம்சம் ஜோடி!.. அதே போல இந்த படமும் சூப்பர் ஹிட்டாகும்.. சரத்குமார் உறுதி!..

Published on: August 8, 2025
---Advertisement---

நடிகர் சரத்குமார் மற்றும் தேவையானி நடித்த சூர்யவம்சம் திரைப்படம் வெளியாகி நாளை ஜூன் 27ம் தேதியுடன் 28 ஆண்டுகாளை கடந்து இன்னமும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்துள்ள 3பிஎச்கே திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளீயிட்டு விழா இன்று நடைப்பெற்றது.

அருண் விஸ்வாவின் ஷாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3பிஎச்கே திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சித்தார்த், ஆர். சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

3பிஎச்கே படத்தின் கதை சென்னையில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கான அவர்களின் முயற்சிகளையும், ஏற்படும் சோதனைகளையும், தனிப்பட்ட பிரச்சனைகளையும் கதைத்தளமாக கொண்டுள்ளது. இது ஒரு ராஜா கதை இல்ல இது நம்ம குடும்பத்தை பற்றிய கதை என்று டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நடைப்பெற்ற ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் பேசிய சரத்குமார், தான் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக என பல படங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது என்றால் அந்த கதை அவர்களுடன் ஒன்றிணைந்துள்ளது. அதனால், அந்த படங்கள் எல்லாம் இன்னமும் பேசப்படுகிறது. வீடு கட்டனும் என்பது எல்லாருக்கும் இருக்குற ஒரு மிகப்பெறிய கனவு. அது அனைவராலும் அடையமுடியுமா என்று தெரியவில்லை. அனைவருக்கும் வீடு என்பது அவசியம் தேவை அதை அடைய அவர்கள் எதிர்க்கொள்ளும் சோதனை அதிகம் என்றார்.

மனிதன் ஒரு முயற்சியில் விழுந்தால் எழவேண்டும். தயாரிப்பாளர் அருண் ஷேவ் பண்ணி வந்திருப்பதை பார்த்தால் அவர் அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை தேவையானி இயக்குவார் என்றும் கலாய்த்து பேசினார் சரத்குமார்.

நடிகர் சூரி அந்த படம் குறித்து பேசிய போது, ஒரு வீடு, ஒரு கனவு, தனக்கு ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இனிய இடம். தயாரிப்பாளர் அருணிற்கும் 3பிஎச்கே குழுவிற்கும் கனவு நிஜமாகி உயர்ந்த வெற்றியை தொட தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார். ஏகப்பட்ட பிரபலங்களும் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 3பிஎச்கே படத்தை பாராட்டி பேசியுள்ளனர். அடுத்த மாதம் தொடக்கத்தில் அந்த படம் வெளியாகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment