
Cinema News
எம்ஜிஆர், ஜெய்சங்கர் அடுத்து ரஜினிதான் அந்த விஷயத்தில் பெஸ்ட்.. யாருமே செய்யல
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று பல ஆண்டுகளாக தன் இமேஜை கட்டி காத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சின்னக் குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான் என அடித்து சொல்வார்கள். ஃபேமிலி ஆடியன்ஸிடம் எளிதாக கனெக்ட் ஆக கூடிய நடிகர். 50 ஆண்டுகாலமாக சினிமா உலகில் இன்னும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துவருகிறார்.
இது அவருடைய பொன்விழா ஆண்டு. அதனால் சினிமா அவருக்காக விழா எடுத்துக் கொண்டாடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே ராஜன் ரஜினி பற்றி சில விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதாவது ரஜினி யாருக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக பண்ணுவார். சூட்டிங் நேரத்தில் சரியான நேரத்தில் வருவதில் சிவாஜிக்கு அடுத்த படியாக ரஜினிதான் இருக்கிறார்.
அதை போல் இன்று பல நடிகர்கள் ஷாட் முடிந்த பிறகு கேரவனில் போய் உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் ரஜினி இன்றுவரை அப்படி கிடையாது. அப்படி கேரவனில் உட்கார்ந்தால் ஷாட்டுக்கு வர எப்படியும் சில மணித்துளிகள் தாமதமாகிவிடும். அதனால் ஷாட் ரெடியானதும் உடனடியாக போக வேண்டும் என்பதற்காக செட்டிலேயே அமர்ந்துவிடுவார். அதை போல எம்ஜிஆர், ஜெய்சங்கர் அடுத்து ரஜினி தான் தொழிலாளிகளுக்காக படம் பண்ணிக் கொடுத்தார்.
பாண்டியன் திரைப்படம். அந்த படம் தொழிலாளிகளுக்காகத்தான் ரஜினி நடித்தார். அந்தப் படத்தின் மூலம் வந்த லாபத்தில் தொழிலாளிகல் ஒவ்வொருவரும் ஒரு வீடு வாங்கினார்கள். அந்த வீட்டில் ரஜினியின் புகைப்படத்தை அவருடைய நினைவாக மாட்டி வைத்தார்கள்.இதைத்தான் நான் விஜய், அஜித் போன்ற நடிகர்களிடம் சொல்லி கேட்கிறேன்.
பணத்தை வாங்கி எங்க குப்பையிலா கொட்டி வைக்கிறீர்கள்? பணத்தை வாங்கி சேமிப்பு என்பது குப்பைத்தொட்டியில் போடுவது மாதிரிதான். அதே மாதிரி அருணாச்சலம் படம். அந்தப் படமும் டெக்னீசியன்களுக்காகத்தான் நடித்துக் கொடுத்தார். வில்லனாகவே நடித்து வந்த தன்னை ஹீரோவாக ஆக்கிய கலைஞானத்திற்கு 1 கோடி செலவில் பிளாட் வாங்கிக் கொடுத்தார் ரஜினி. இது மாதிரி மற்ற நடிகர்களும் பண்ண வேண்டும் என்பதைத்தான் பல வீடியோக்களில் நான் பேசி வருகிறேன் என கே. ராஜன் கூறினார்.