Connect with us

Cinema News

‘கற்றது தமிழ்’ பார்த்துட்டு எனக்கு போன் பண்ண ஒரே ஹீரோ! ஆனா அவர்தான் அடி முட்டாளாம்

தங்க மீன்கள் படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராம். அந்தப் படத்தில் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான அன்பை வெளிப்படுத்தியிருப்பார் ராம். குறிப்பாக முத்தக்குமார் வரிகளில் தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்தப் பாடலுக்காக முத்துக்குமாருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

அந்தப் படத்தை போலவே ராம் இப்போது ‘பறந்து போ’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பேசும் படமாக எடுத்திருக்கிறார் ராம்.படத்தின் டீசர் டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்று வருகின்றன. படம் வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது.

இந்த நிலையில் இன்று சித்தார்த் மற்றும் சரத்குமார் நடித்த 3BHK படத்தின் விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய ராம் சித்தார்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தார். அதாவது கற்றது தமிழ் படத்தை பார்த்து எனக்கு போன் செய்த ஒரே நடிகர் சித்தார்த் என குறிப்பிட்டிருக்கிறார் ராம். சித்தார்த்தை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு அகங்காரமான ஒரு ஆள்,

மனதில் எதையும் வைத்து பேச தெரியாது. அதே சமயம் ஒரு அடி முட்டாள் என்றும் கூறியிருக்கிறார் ராம். ஏனெனில் சித்தார்த் ஒரு வளர்ந்த குழந்தை என்று கூறினார், மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அந்த ஃப்ளோவில் செய்து கொண்டிருக்கிற ஒரு பஞ்சு போன்ற இயல்பானவர்தான் சித்தார்த் என கூறினார். சித்தார்த் இன்னும் ஏன் இவ்ளோ இளமையாக இருக்கிறார் என்றால் அவருடைய மனசு பஞ்சு போல மிதந்துக் கொண்டே இருந்தால்தான் இளமையாக இருக்க முடியும் என நினைக்கிறேன் என்றும் ராம் கூறினார்.

siddharth

siddharth

அதுமட்டுமில்லாமல் சித்தார்த் ஒரு பத்து பாடல்களை பாடி வைத்திருக்கிறாராம். அந்த பத்து பாடல்களை வைத்து ராம் ஒரு திரைக்கதையை செய்து வைத்திருக்கிறாராம்.அதை ஒரு நாள் படமாக பண்ண வேண்டும் என்றும் ராம் சித்தார்த்திடம் கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top