Rashmika: நயன்தாரா பார்முலாவை கையில் எடுக்கும் ராஷ்மிகா… வாளை கையில் தூக்கிய நேஷனல் க்ரஷ்

Published on: August 8, 2025
---Advertisement---

இந்திய திரையுலகில் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மும்மொழிகளிலும் ரவுண்டுகட்டி ஆடி வருகிறார் இவர். இவர் நடித்த புஷ்பா இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் உள்ளது. சமீபத்தில் வந்த குபேரன் கூட 100கோடி வசூலை தொட்டுள்ளது.

இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த படத்தில் நயன்தாரா பார்முலாவை கையில் எடுத்துள்ளார் ராஷ்மிகா. அதாவது நயன்தரா நாயகியாக நடித்து வந்த பொழுது திடீரென முதன்மை நாயகியக நடிக்க துவங்கினார். அதாவது நாயகன் இல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேந்தெடுத்து நடிக்க துவங்கினார். இமைக்கா நொடிகள், நெற்றிகண்,கனெக்ட், ஐரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ஒரிரு படஙகளே வெற்றி பெற்றன.

நயன்தாராவை பார்த்து திரிஷாவும் சில படங்களில் முதன்மை நாயகியாக நடித்தார். ஆனால் அதில் ஒரு படங்கள் கூட தேரவில்லை. இதனால் தனது முடிவை மாற்றி தற்போது பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகாவிற்கும் அந்த ஆசை தற்போது வந்துள்ளதாக தெரிகிறது. Unformula Films என்ற நிறுவனம் தயாராப்பில், நாயகியை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் ரஷ்மிகா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா ஒரு வாளை கையில் படி காட்சியளிக்கிறார்.படத்தின் தலைப்பு நாளை வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் வெற்றியைப் பொருத்தே ராஷ்மிகாவின் அடுத்த நகர்வுகள் இருக்கும் என்றே தெரிகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment