Connect with us

Cinema News

ரத்த அபிஷேகத்துக்கு ரெடியா மாமே! சூர்யாவின் அடுத்த பட அப்டேட்.. அப்போ ரோலக்ஸ்?

சூர்யா ஆர் ஜே பாலாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் குறுகிய கால படமாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்தப் படத்துக்கு கருப்பு என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா நடிக்கிறார். ஆன்மீகம் கலந்த ஒரு ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் வெங்கி அட்லூரிக்கு அடுத்து சூர்யா அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் இணையப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் தான் இயக்க போகிறாராம். ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்தது.

அதனால் ஒரு வேளை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நடிக்கும் படமாக வருமோ என்று கேட்டு வருகிறார்கள். சூர்யாவை வைத்து நிச்சயமாக ரோலக்ஸ் திரைப்படம் வரும் என லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் அதற்குள் இருவரும் சேர்ந்து இப்படி ஒரு படத்தில் நடிப்பார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை இதுவும் எல்.சி.யூவில் வருமா என்றும் கேட்டு வருகிறார்கள்.

rolex

rolex

இன்னொரு பக்கம் அருண் மாதேஸ்வரன் படம் என்றாலே வன்முறை நிறைந்த காட்சிகளாக இருக்கும். ஏற்கனவே உடம்பு முழுவதும் ரத்தத்துடன் சூர்யாவை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பார்த்ததற்கே அனைவருமே ஷாக் ஆனார்கள். ஆனால் இப்போது அருண் மாதேஸ்வரன் படம் எனும் போது சூர்யா கொஞ்சம் யோசிக்கணும் என கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்கள் மண்ணை கவ்வியது. அதனால் இனிமேல் வைக்கிற ஒவ்வொரு அடியையும் பார்த்துதான் வைக்க வேண்டும் என சூர்யா என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top