100 கோடி வசூலை தொட்ட குபேரன்?!.. இட்லி கடையும் வசூல் பண்ணா ஹாட்ரிக்தான்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kubera collection: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். அவரின் அண்ணன் செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் இவருக்கு முக்கியமான படங்களாக அமைந்தது. இதில், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு தேசிய விருதும் வாங்கினார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் அவ்வப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படி அவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்த திரைப்படம்தான் குபேரா. இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடிகளை வைத்திருக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளி தனது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அரசாங்கத்தின் ஆயில் பிராஜெக்ட் ஒன்றை வாங்க திட்டமிடுகிறார்.

நேர்மையாக இருந்ததால் சிறையில் இருக்கும் நாகார்ஜுனாவை வெளியே கொண்டு வந்து அவரின் அறிவுரைப்படி எல்லாம் நடக்கிறது. 4 பிச்சைக்காரார்களை தேர்ந்தெடுத்து அவர்களை பினாமியாக்கி அவர்களின் வங்கி கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சி செய்கிறார்கள். அந்த 4 பேரில் தனுஷும் ஒருவர். வேலை முடிந்த பின் பிச்சைக்காரர்களை கொலை செய்து விட திட்டமிட்டுகிறார்கள். இதை தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பிவிடுகிறார் தனுஷ். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் ஆக்ரோஷமாக பன்ச் வசனமெல்லாம் பேசினார். தன்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புபவர்கள் பற்றியெல்லாம் பேசினார். படம் வெளியானதும் முதல் காட்சியை பார்த்துவிட்டு படத்தை சிலர் ஆஹோ ஓஹோ என புகழ்ந்தனர். தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது என்றெல்லாம் பேசினார்கள்.

ஆனால், 3 காட்சிகளுக்கு பின் படத்தின் 3 மணி நேர நீளம் அயர்ச்சியை கொடுப்பதாகவும், இரண்டாம் பாதி போரடிப்பதாகவும், படத்தின் கிளைமேக்ஸ் சரியில்லை என்றெல்லாம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. தமிழ், ஹிந்தி மொழிகளில் இப்படம் பெரிய வசூலை பெறவில்லை என்றாலும் தெலுங்கு ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் இந்தியாவில் 60 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் இப்படம் 100 கோடி வசூலை தொட்டுவிட்டதாக இப்போது செய்திகள் கசிந்திருக்கிறது. ஆனால், படக்குழு இன்னும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ராயன் படம் 100 கோடி வசூல் என சொல்லப்படும் நிலையில் இப்போது குபேரனும் 100 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. அடுத்து வரும் இட்லி கடையும் 100 கோடி வசூலை பெற்றால் தனுஷுக்கு ஹாட்ரிக் வெற்றி என்றே சொல்லலாம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment