Connect with us

போடா!. உன் மனசுக்கு பிடிச்சத பண்ணு!.. விஜய் சொல்லிதான் ஸ்ரீகாந்த் சிக்குனாரா!.. வைரல் மீம்ஸ்!.

latest news

போடா!. உன் மனசுக்கு பிடிச்சத பண்ணு!.. விஜய் சொல்லிதான் ஸ்ரீகாந்த் சிக்குனாரா!.. வைரல் மீம்ஸ்!.

Srikanth: ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன்பின் பம்பரக்கண்ணாலே, மனசெல்லாம், பூ, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு சினிமா பக்கம் போய் நிறைய படங்களில் நடித்தார். ஆனால், அங்கு கதாநாயகன் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. எனவே, போலீஸ் அதிகாரி, ஹீரோவின் அண்ணன் உள்ளிட்ட வேடங்களில் நடித்து வந்தார். சில படங்களை தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு தினசரி என்கிற படமும் வெளியானது.

இந்நிலையில்தான் போதைப்பொருளை பயன்படுத்திய புகாரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். திரையுலகில் கொக்கைன் போதைப்பொருள் பல வருடங்களாக புழங்கி வருகிறது. பல பெரிய இடத்து பிள்ளைகள், பிரபலமான நடிகர், நடிகைகள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், எல்லோரும் சிக்குவதில்லை.

ஆனால், ஸ்ரீகாந்த் எப்படியோ சிக்கிவிட்டார். பிரசாத் என்பவர் தன்னை வைத்து படம் தயாரித்ததாகவும், 10 லட்சம் சம்பள பாக்கியை கேட்டபோது கொக்கைன் கொடுத்து தனக்கு அவர் பழக்கிவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். பிரசாத் கொடுத்த கொக்கைனை வைத்து கடந்த சனிக்கிழமை வீட்டில் பார்ட்டி நடத்தியதாகவும் சொல்லி அதிர வைத்திருக்கிறார். அவரோடு நடிகர் கிருஷ்ணாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அவர் எங்கேயோ தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

தெரியாமல் இதை பயன்படுத்திவிட்டேன். என் மகனை பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில், நண்பன் படத்தில் ஸ்ரீகாந்திடம் விஜய் ‘போடா.. போய் உன் மனசுக்கு பிடிச்சத பண்ணு’ என சொல்லும் காட்சியை வெட்டி இப்போதுள்ள சூழ்நிலைக்கு பொருந்துவது போல மீம்ஸை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top