Connect with us

Cinema News

இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ? ஸ்ரீகாந்த் வாக்குமூலத்தால் கிருஷ்ணாவை தேடும் பணியில் போலீஸ்

போ..தைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாக வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை சமீபத்தில்தான் போலீஸ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள். ஜூலை 7 ஆம் தேதி வரை அவருக்கு சிறையில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக நிர்வாகி பிரசாத் மூலமாகத்தான் ஸ்ரீகாந்த் போ..தை பொருட்களை பயன்படுத்தியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.பிரசாத் ஒரு படத்தை தயாரிக்க அந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த்துக்கு 10 லட்சம் சம்பள பாக்கி இருந்திருக்கிறது.

அந்த தொகைக்கு பதிலாகத்தான் பிரசாத் போ..தை பொருட்களை கொடுத்து ஸ்ரீகாந்தை போதைப்பொருளுக்கு அடிமையாக்கியிருக்கிறார். மூன்று முறை பிரசாத் ஸ்ரீகாந்த்துக்கு போ..தை பொருட்களை கொடுக்க 4வது முறையாக அவரே வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு ஸ்ரீகாந்த் அடிமையாகியிருக்கிறார். சமீபத்தில் துபாயிலிருந்து சென்னை திரும்பிய ஸ்ரீகாந்த் தன் வீட்டிலேயே பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறார்.

அந்த பார்ட்டியில் கொக்கனையும் பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த். இதில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாக தனது வாக்கு மூலத்தில் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரு படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற கிருஷ்ணாவை அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. சைபர் கிரைம் அவருடைய நம்பரை ஆய்வு செய்த போது கேரளாவில் அவர் இருந்தது தெரியவந்திருக்கிறது. அதனால் 5 போலீஸ் தனிப்படைகள் கொண்ட அமைப்பு கிருஷ்ணாவை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இவரும் போலீஸ் வளையத்திற்குள் வந்துவிட்டால் இன்னும் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினார்கள்?

யாரெல்லாம் சிக்குவார்கள்? என்பது தெரியவரும். கழுகு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர்தான் கிருஷ்ணா. பில்லா படத்தை படத்தை எடுத்த இயக்குனர் விஷ்ணு வர்தனின் தம்பி கிருஷ்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top