Connect with us

latest news

Siragadikka Aasai: ரோகிணிக்கு இந்த ஆசை மட்டும் அடங்காதே… வித்யாக்கிட்ட அடி வாங்காம இருந்தா சரி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

மீனா வீட்டு ஹவுஸ் ஓனர் முத்துவிடம் பெண்கள் இப்போது எல்லாம் காதலித்தவனே கல்யாணம் செய்து கொள்கிறார்களே என கேட்க முத்து கோபமாகிவிடுகிறார். மத்த பொண்ணுங்க எப்படியோ எங்க வீட்டு பொண்ணு அப்படி செய்ய மாட்டாள்.

உடனே சீதாவை அழைத்து நீ மாமா சொல்ற பையன் தானே கட்டிப்ப எனக் கேட்க சீதாவால் எதுவும் சொல்ல முடியாமல் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விடுகிறார். பின்னர் மீனா முத்துவை சமாதானம் செய்து அவரை சாப்பிட அனுப்பிவிட்டு சீதாவை பார்க்க செல்கிறார்.

அழுது கொண்டிருக்கும் சீதாவிற்கு ஆறுதல் சொல்லி எதுக்கு இப்ப அழுகிறாய் என கேட்க ரொம்ப குற்ற உணர்ச்சியாய் இருப்பதாக கூறுகிறார். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னாடி தான் யோசிக்கணும். செஞ்சிட்டு கவலைப்பட கூடாது. இனிமேதான் ஜாக்கிரதையா இருக்கணும். அருண்கூட வெளியில் எங்கும் போகாதே என்கிறார்.

சிட்டியை பார்க்க வரும் ரோகிணி என்னிடமே திருட்டு நகையை கொடுத்து ஏமாற்றி விட்டாய் என திட்டுகிறார். இதைக் கேட்டு புதிதாக தெரிந்தது போல சிட்டி திருட்டு நகையா என அவரும் அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் ரோகிணி அவரிடம் கொடுத்த பணத்தை கேட்க நகையை கொடுங்கள் என்கிறார்.

என் மாமியாரிடம் இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்காக தான் அந்த நகையை வாங்கினேன். அவங்க ஒரு பங்ஷனுக்கு போட்டுட்டு போயி சம்பந்தப்பட்டவங்க அந்த நகையை பார்த்து பெரிய பிரச்சினையாகி அவங்க அந்த நகையை வாங்கிட்டாங்க என்கிறார்.

உடனே சிட்டி எனக்கும் இது திருட்டு நகை என தெரியாது. நானும் உங்களை போல தான் ஏமாந்து இருக்கிறேன். பொருளை கொடுத்தால் காசினை வாங்கிக் கொள்ளலாம். இல்ல எனக்கு தான் ஒரு லட்சம் நஷ்டம் என கறாராக சொல்லிவிடுகிறார்.

அப்போ காசை கொடுக்க முடியாதுல. உன்னை நம்பி வந்து வாங்குனது என் தப்புதான் எனச் சொல்லி வெளியில் வந்துவிடுகிறார். வித்யாவிடம் கேட்டாலும் அவ முருகனிடம் தான் கேட்கணும் எனக் கூறி நேரே அவருக்கே கால் செய்து கடன் கேட்க அவர் அப்புறம் கூப்பிடுவதாக சொல்கிறார்.

ரோகிணி தனக்கு அவசரம் எனக் கூற அவர் வெளியில் இருப்பதாக வைத்து விடுகிறார். மீனா தன்னுடைய போனில் சீதாவின் கல்யாண புகைப்படங்களை பார்த்து கொண்டு இருக்கிறார். அப்போது முத்து அவருக்கு சமைக்க போகிறார் மீனா. முத்து போனை எடுக்க போக அவர் வந்து புடுங்கி கொள்கிறார்.

பின்னர் இருவரும் படுத்துவிட முத்து தன் தங்கைக்காக பாசமாக தானே நினைக்கிறார் என குற்ற உணர்ச்சியில் நினைத்து கொள்கிறார். ரோகிணி மற்றும் மனோஜ் இடையே சண்டை நடக்க அதை ஒட்டுக்கேட்டு உள்ளே வரும் விஜயா அவரை திட்டிக்கொண்டு இருக்கிறார்.

Continue Reading

More in latest news

To Top