அனிருத்தை அசிங்கப்படுத்திய சாண்டி மாஸ்டர்!.. கூலி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டில் செம கலாய்!..

Published on: August 8, 2025
---Advertisement---

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்றுடன் வெளியிட்டுள்ளது.

நெல்சன் பாணியில் லோகேஷ் கனகராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டும் காமெடி கலந்த ப்ரோமோவாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். காரில் இருந்து இறங்கும் ராக் ஸ்டார் அனிருத், ரஜினிகாந்த் போல தங்க வாட்ச்களை மாலையாக கட்டிக் கொண்டு போக, இது அந்த பாடல் இல்லை என்றும் வெறும் கர்ச்சிப் போதும் என சாண்டி மாஸ்டர் கொடுத்து அனிருத்தை கலாய்க்கும் விதமான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

டி. ராஜேந்தரை வைத்து பங்கமாக ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்தாலும், புதுசாவும் ஃபிரெஷ்ஷாகவும் இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

வரும் ஜூன் 25ம் தேதி மாலை 6 மணிக்கு ஜிகிடு வைப் முழு பாடல் லிரிக் வீடியோவும் வெளியாகும் என்கிற அப்டேட்டை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், இனிமேல் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஜிகிடு வைப் உடனே சுற்றப் போவது உறுதியாகி உள்ளது.

வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகப் போகும் கூலி படத்தை தான் தமிழ் சினிமா இந்த ஆண்டு ரொம்பவே நம்பி காத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment