கண்ணப்பா பார்வதி தேவியா இது!.. பிகினி உடையில் இணையத்தை சூடாக்கிய காஜல் அகர்வால்!..

Published on: August 8, 2025
---Advertisement---

தனது தங்கையுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பி பார்க்க வைத்து வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் 19ம் தேதி தான் நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்று தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார். இந்நிலையில், தனது குடும்பத்துடன் கடலில் பிகினியுடன் விளையாடிய புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

பாலிவுட்டில் கியுன் ஹொ கயானா படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தன் திரைவாழ்க்கையை தொடங்கிய காஜல் அகர்வால், தெலுங்கில் லக்ஷ்மி கல்யாணம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி படம் மூலம் கதாநாயகியாக பேரரசு இயக்கத்தில் அறிமுகமானார்.

காஜல் அகர்வால் தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. மேலும் அதை தொடர்ந்து டார்லிங் , பிருந்தாவனம் , மிஸ்டர் பர்ஃபெக்ட், பிசினஸ்மேன் என பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழிலும், நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, மெர்சல் , கோமாளி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

2020ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் கிச்சலு என்ற ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று விலகியிருக்கும் காஜல் அகர்ல்வால் இந்தியன் 3 மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் தெரிகிறது. மேலும், கண்ணப்பா படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக பார்வதி தேவியாக நடித்துள்ளார். அதையடுத்து ராமாயணம் படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 19ம் தேதி பிறந்த நாளை பீச்சில் கொண்டாடிய காஜல் அகர்வால் தனது சகோதரியுடன் கடலில் வெள்ளை நிற பிகினியில் உள்ள கிளமரான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். சோஷியல் மீடியா முழுவதுமே காஜல் அகர்வாலின் கடற்கரை புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment