Connect with us

திரிஷா கூட மட்டும் நேரம் இருக்கா?!. ரசிகர்களை பார்க்க மாட்டாரா?!. பொங்கும் ஃபேன்ஸ்!..

latest news

திரிஷா கூட மட்டும் நேரம் இருக்கா?!. ரசிகர்களை பார்க்க மாட்டாரா?!. பொங்கும் ஃபேன்ஸ்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருகிறார். நடிப்பு பெரிதாக இல்லை என்றாலும் தனது நடனத்திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். பூவே உனக்காக போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய பெண் ரசிகை கூட்டத்தையே பெற்றார்.

கில்லி, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மாரியாதை போன்ற படங்களின் வெற்றி இவரை கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாற்றியது. இப்போது 250 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் இவர். இவரின் படங்கள் 400 கோடி வசூலை தாண்டுகிறது. ஆனால், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திருக்கிறார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் விஜயை முதல்வராக பார்க்க வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருக்கிறது. அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவை பொறுத்தே விஜய் சினிமாவில் நீடிப்பாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். சமீபகாலமாகவே விஜயின் சொந்த வாழ்க்கை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துவிட்டது.

விஜய் அவரின் மனைவி குழந்தைகளுடன் இல்லை. தனியாகவே வசிக்கிறார். அவரின் மனைவியோடு அவருக்கு பிரச்சனை. அதனால்தான் அவரின் மனைவி சங்கீதா லண்டனில் வசிக்கிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஒருபக்கம், நடிகை திரிஷாவுடன் விஜய் நெருக்கமாக இருக்கிறார். இருவரும் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி, லியோ போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

லியோ படத்தில் விஜய்க்கு திரிஷா லிப்லாக் கொடுக்கும் காட்சியும் இருந்தது. அதோடு, விஜயோடு திரிஷா வெளியே சுற்றும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். இந்நிலையில், ஜூன் 22ம் தேதியான நேற்று விஜய் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரின் நண்பர் சஞ்சய், அவரின் குடும்பம் மற்றும் திரிஷா ஆகியோரோடு அவர் பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் வீட்டின் முன்பு அவரின் ரசிகர்கள் பலர் விஜய்க்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்திருந்தார்கள்.

ஆனால், விஜய் அவர்களை சந்திக்கவில்லை. எனவே, திரிஷாவுடன் அவர் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து ‘ரசிகர்களை சந்திக்க முடியாத விஜய் திரிஷாவுடன் மட்டும் நேரம் செலவழிக்கிறார் என பலரும் விமர்சனம் செய்ய துவங்கிவிட்டனர். இதெல்லாம் தெரிந்தும் கூட விஜய் எதையும் யோசிக்காமல் அவர்களை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top