Connect with us

Cinema News

காதல் உணர்வுக்கு பம்பாய் சாங்… அந்த உணர்வுக்கு தக் லைஃப் சாங்… இளையராஜாவிடம் சுட்ட முத்தமழை பாடல்!

தனுஷின் ஒய் திஸ் கொலை வெறி பாடல் தான் மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. அதுமாதிரி தான் தக் லைஃப்ல வந்த முத்து மழை பாடல். இந்தப் பாட்டை சின்மயி பாடுனதுக்கு அப்புறம் தான் இவ்ளோ வியூஸ் போனது.

ஆங்கில வார்த்தையே கலக்காம வந்து இருப்பதுதான் இந்தப் பாடலின் சிறப்பு. முல்லை இரவுகள் பற்றி எரியாதோன்னு சொல்லிருக்காங்க. தமிழகத்தில் நிலங்களை 5 வகையாகப் பிரித்து வைத்து இருப்பாங்க. முல்லை என்றால் காடும் காடு சார்ந்த இடமும்.

அந்த இடங்களில் தலைவர்கள் பொருள் ஈட்டவோ, போருக்காகவோ போயிடுவாங்க. அதனால் தலைவனை பிரிந்த தலைவி ஊக்கத்தோடு இருப்பாங்க. திரிஷா அதுமாதிரி ரொம்ப அற்புதமாக உணர்வுகளைக் காட்டி இருப்பாங்க. முல்லை மலர்கள் காட்டுல இரவு நேரங்களில் தான் மலரும். அப்படி மலரும்போது அந்த வாசம் காடு முழுவதும் வீசும்.

அந்த வாசம் வீசும்போது பெண்ணோட காதல், காம ஆசைகள் அதிகமாக வந்து அந்த உணர்வுகள் வெளிப்படும். இரவு நேரம் தான் இந்த 2 ஆசைகளும் வரும். இதுவுமே குறுந்தொகைப் பாடலின் வரிதான். ‘முல்லை இரவுகள் பற்றி எரியாதோ’ என்ற வரிக்கு இதுதான் அர்த்தம். காதல் அதிகமா வெளிப்படும்போது வருவது காம உணர்வு.

அந்தப் பாடலில் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை ஏங்கித் தவிக்குது உசுருன்னு ஒரு வரி வரும். தலைவனோட பிரிவு எப்படி வாட்டி வதைக்குது என்பதுதான் இந்த வரிகள் சொல்கிறது. தன்னோட தலைவனின் அன்பு, காதல் போன்ற உணர்வு மட்டுமே மனதில் இருக்கும். வேறெந்த உறவும் மனதில் நிற்காது. உன்னைத்தவிர வேறு எந்த உறவும் வெளிவேஷம் தான் என்பேன் என்கிறாள் காதலி.

இத்தகைய இலக்கிய நயமிக்க பாடலாக இருப்பதால் தான் அனைவரும் ரசிக்கின்றனர். இளையராஜாவின் ஆல்பத்தில் 1986ல் ஹவ் டு நேம் இட் என்ற பெயரில் ஒரு மியூசிக் போட்டு இருக்கிறார். அந்த மியூசிக் முத்த மழை பாடலுடன் ஒத்துப்போகும். அதே போல பம்பாய் படத்தில் கண்ணாளனே பாடலிலும் காதலை விவரிக்கிற இடம் அழகாக இருக்கும்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top