ஜெயிலர் படத்தைத் தவிர ஒன்னுமே ஓடலை… ரஜினியைப் பத்தி இப்படியா சொல்வாரு சகலை?

Published on: August 8, 2025
---Advertisement---

நடிகர் ஒய்ஜி மகேந்திரன் சினிமா மட்டும் அல்லாமல் நாடகத்திலும் சிறந்த நடிகர். இன்று வரை மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். சிறந்த எழுத்தாளரும்கூட. சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரது நடிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இவர் நடிகர் ரஜினி, நடிகை வைஜெயந்திமாலாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி சுதா மகேந்திராவின் தங்கை தான் லதா ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரஜினிகாந்துக்கு இவர் சகலை என்ற ஒரு உறவுமுறை உண்டு. நடிகர் ஒய்ஜி.மகேந்திரன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சகலை. அவர் ரஜினியைப் பற்றி என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க.

ஜெயிலர் படம் நல்லா இருந்ததால் ரசிச்சாங்க. படம் ஓடுனது. கால்ல விழாம இருந்துட்டா இதுக்கு முன்னாடி வந்த படங்கள் எல்லாம் ஏன் ஓடலை? நீங்களே சொல்றீங்க. ரொம்ப நாளாச்சு. அவருக்கு படம் ஹிட் கொடுத்துன்னு. எல்லா ரசிகர்களும் சொல்றாங்கள்ல. அப்போ யாரு கால்லயாவது விழுந்தாரா? இல்ல. ஏதாவது பண்ணினாரா? ஒண்ணும் பண்ணல.

இத்தனைக்கும் அவரு நான் பொலிடிக்கலுக்கு வரப்போறேன்னு கூட சொன்னாரு. அப்பவும் படம் ஓடலையே. ஃபைனலா ஒரு நடிகனுக்கு படம் நல்லாருந்தா ஓடும். அதனால அவரு அன்னைக்கு டைரக்டர் கரெக்டா இருந்தா படம் ஃபெய்ல் ஆகாதுன்னு சொன்னாரு என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

ஜெயிலர் படத்தோட வெற்றிக்கு முன்னாடி பெரிசா எந்த ஹிட்டும் ரஜினி கொடுக்கலைன்னு சொல்றாரு ஒய்ஜி.மகேந்திரன். அப்படின்னா சகலையோட கணிப்பைப் பொய்யாக்குவாரா சூப்பர்ஸ்டார்னு பார்ப்போம். இப்போ இளம் இயக்குனர் லோகேஷ்; கனகராஜின் இயக்கத்தில் கூலி படம் வருகிறது.

இந்தப் படம் ஜெயிலர் படத்தை விட மாஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தான் அத்தனை பேரும் படத்தில் பணியாற்றி வருகின்றனர். ரஜினியே படத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டுள்ளார். படம் ஜெயிலரின் வெற்றியைத் தாண்டுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment