Connect with us

காப்பி அடிக்கலாம் அதுக்குனு இப்படியா? தமிழ் சூப்பர்ஹிட் படத்தினை காப்பி அடித்த கயல் சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்!

latest news

காப்பி அடிக்கலாம் அதுக்குனு இப்படியா? தமிழ் சூப்பர்ஹிட் படத்தினை காப்பி அடித்த கயல் சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்!

Kayal: பிரபல தமிழ் சீரியலான கயல் தொடரின் சமீபத்திய காட்சி ஒன்று தற்போது வைரலாகி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக சின்னத்திரையில் சில தொடர்கள் தேவையே இல்லாமல் சிலர் காட்சிகளை உருவாக்கி விட்டு திட்டு வாங்கிக்கொள்வது வழக்கம். சன் டிவியில் அப்படி ஒரு சீரியல் நெற்றியில் குண்டு அடிப்பட்டு ஒரு பெண் பல மணி நேரம் தன் கணவருடன் பேசிக்கொண்டே வருவது.

அந்த காட்சி பல வருடங்களை கடந்து இன்றளவு ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. தற்போது இன்னொரு வைரல் சர்ச்சையும் உருவாகி இருக்கிறது. டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவியின் கயல் சீரியல் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக டிஆர்பியில் டாப் 3 இடத்திற்குள்ளே இருக்கிறது. இந்த சீரியல் பொதுவாக பிரச்னைகள் மட்டுமே அதிகம் இருக்கும் சீரியல். இந்த சீரியலில் கயல் தங்கை கேரக்டருக்கு 2 வருடம் கழிந்து குழந்தை பிறந்ததே பல நாட்கள் கலாய்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஒரு பிரபல படமான பிச்சைக்காரன் படத்தில் ஒரு காட்சியை அப்பட்டமாக காப்பி அடித்துள்ளனர். ஹீரோயின் தெரியாமல் ஒரு கார் மீது பைக்கை இடித்துவிடுவார். அப்போ கார் காரர் உங்களையும் என்னையும் ஒரே ரோட்டில போக வச்சிருக்கான் என திமிராக பேசுவார்.

அதற்கு ஹீரோ இந்த காரை தமிழ்நாட்டில் ரிஜிஸ்டர் செய்யாம பாண்டிச்சேரியில் பண்ணினா 3 லட்சம் மிச்சம் ஆகும்னு பண்ணி இருக்க நீ பிரஸ்டீஜ் பேசுறீயா. டீசல் மிச்சம் செய்ய காரில் ஏசியை கூட போடலை என ஹீரோ கலாய்ப்பார்.

இந்த காட்சியை அப்பட்டமாக தற்போது கயல் சீரியலில் வைத்துள்ளனர். ஹீரோயின் கயல் பைக்கை காரில் இடிக்க அதற்கு ஹீரோவாக எழில் பேசும் வசனம் இப்படியே அமைக்கப்பட்டுள்ளது. கொடுமை என்னனா பண விபரத்தை கூட அப்படியே வச்சி இருக்காங்க. இதை ரசிகர்கள் தற்போது கலாய்த்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top