Connect with us

Cinema News

‘குபேரா’ வின்டேஜ் வெர்ஷன பார்த்திருக்கீங்களா? புளூசட்டை மாறன் செம கலாய்

இன்று தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் குபேரா. கடந்த 2021 ஆம் ஆண்டே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போதுதான் படம் ரிலீஸாகியிருக்கிறது. படப்பிடிப்பில் சில தொய்வு ஏற்படவே இவ்வளவு நாள் காலதாமதமாகிவிட்டது.

தோழா படத்திற்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நாகர்ஜூனா. அடுத்ததாக ரஜினியுடன் கூலி படத்திலும் நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் ராஷ்மிகாவும் மெல்ல மெல்ல கோலிவுட்டில் ராணியாக மாற பார்க்கிறார். அவருக்கு என இங்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். அவருடைய எக்ஸ்பிரஷனுக்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதன்முறையாக தனுஷும் ராஷ்மிகாவும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. படத்தில் பிச்சைக்காரனாக தனுஷ் நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் நாகர்ஜூனா மிகப்பெரிய தொழிலதிபராக நடித்திருக்கிறார். அவருடைய சூழ்ச்சி வலையில் சிக்கி எப்படி விடுபடுகிறாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நாகர்ஜூனா. படம் பார்த்தவர்கள் நாகர்ஜூனாவின் நடிப்பு பிரம்மாதம் என கூறி வருகிறார்கள். வழக்கம் போல் தனுஷும் நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார் என்றும் சொல்லி வருகிறார்கள். எந்தவொரு பெரிய படம் ரிலீஸானாலும் புளூ சட்டை மாறன் அந்தப் படத்தை பற்றி என்ன கமெண்ட் அடிக்கிறார் என்பதுதான் பல பேரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

அந்த வகையில் குபேரா படத்தையும் கிண்டல் செய்துபோஸ்டரை வெளியிட்டிருக்கிறார் புளூசட்டை மாறன். குபேரா படத்தின் வின்டேஜ் வெர்ஷன் இதுதான் என முத்து படத்தில் அப்பா ரஜினி ஒரு அழுக்கு டிரஸுடன் தலை முழுவதும் முடியுடன் வந்து சன்னியாசி மாதிரி வருவார்.இதுதான் குபேராவின் வின்டேஜ் வெர்ஷன் என பதிவிட்டிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top