Connect with us

latest news

Kuberaa: தனுஷ் தெனாவட்டாக பேசியது இதற்குதானா? குபேரா படம் எப்படி இருக்கு?

Kuberaa: தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் குபேரா படத்தின் பாசிட்டிவ் மைனஸ் பேசும் விமர்சனம்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வெளிவந்து இருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

படத்தின் கதை: அதிகாரம் மற்றும் நேர்மைக்கு எதிரான போராட்டம். ஜிம் சரப் ஒரு பவர்புல் பிசினஸ் மேன். வங்காள விரிகுடாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளங்களை கைப்பற்றும் திட்டத்தில் இறங்குகிறார். இதற்கு அவருக்கு முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜூனா உதவுகிறார்.

தேவா என்கிற தனுஷ் ஒரு சிறிய நகரத்தில் பிச்சை எடுத்தாலும் நேர்மையான மனிதனாகவே வாழ்கிறார். ஆனால், அவன் நடமாட்டம், பேசும் முறையில் ஒரு மர்மம் இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு திட்டத்துடன் நகரத்தில் திடீரென செல்கிறார்.

அங்கு நேர்மைக்கும், அதிகாரத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமும், தனுஷின் பின்னணி என்பதை சொல்வதுதான் மொத்த கதை. சுவாரஸ்யமான கதைக்களம் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு முன்னணி ஹீரோவான தனுஷ் இப்படி ஒரு கேரக்டரை ஒப்புக்கொண்டதற்கே பெரிய அப்ளாஸ்.

பிச்சைக்காரராக தன்னுடைய வேடத்திற்கு எந்த சமரசமும் செய்யாமல் நடித்திருக்கிறார். தேவையான இடங்களில் அவர் முகபாவமே நம்மை படத்தோடு கொண்டு செல்கிறது. நாகர்ஜூனா முதிர்ச்சியான நடிப்பால் நம்மை கட்டிப்போடுகிறார்.

பத்திரிக்கையாளராக ராஷ்மிகா மந்தனாவிற்கும் சமமான வேடம் கொடுத்தற்கே சேகர் கம்முலாவிற்கு சல்யூட் தான். படம் 3 மணி நேரம் என்றாலும் போர் அடிக்காமல் பரபரப்பாக செல்கிறது. முதல்பகுதிக்கு பின்னர் மேலும் வேகம் எடுக்கிறது.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மிகப்பெரிய பலமாகி இருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசை ஏ கிளாஸ். பொதுவாக தனுஷிற்கு பாடல்கள் சரியாக அமைந்துவிட்டாலே படம் சூப்பர் ஹிட். அந்தவகையில் குபேரா தற்போது இணைந்து விட்டது.

சின்ன சின்ன லாஜிக் இடையூறுகளை தவிர படம் பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டுக்கு அடுத்த இணைப்புதான். இப்படத்திற்கு தனுஷிற்கு அடுத்த தேசிய விருது கொடுக்கப்படும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top