Connect with us

Cinema News

ஒரு போட்டோவுக்கே பத்திக்கிச்சு! ரெண்டு பேரும் ஒரே ஸ்கிரீன்ல வந்தா? ஏகே 64 மாஸ் அப்டேட்

குட் பேட் அக்லியின் தாக்கம்:

தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்தி தான் நாளுக்கு நாள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ,திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அந்த படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக மாறி மாபெரும் வெற்றியை பெற்றது. அஜித் கெரியரில் இந்த படம் தான் தி பெஸ்ட் படமாகவும் அமைந்தது. இன்னும் அந்த படத்தின் தாக்கத்திலிருந்து அஜித் ரசிகர்கள் விடுபடவில்லை.

பில்லா படத்திற்கு பிறகு நடந்த மேஜிக்:

பில்லா படத்தை எந்த அளவு கொண்டாடினார்களோ அதற்கு அடுத்தபடியாக ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளது. குட்பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. அஜித்தின் கெரியரில் 200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்றால் இதுதான் முதல் திரைப்படமாகும். அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் அஜித் இணையப் போகிறார் என சொல்லப்படுகிறது.

அஜித்தின் சம்பளம்:

அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. அதற்குள் அஜித் அவருடைய கார் ரேஸ் எல்லாம் முடித்துவிட்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அடுத்த படத்திற்கான வேலையில் கவனம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கப் போவதாகவும் தெரிகிறது. இதனுடைய பட்ஜெட் அஜித்துக்கு கொடுக்கப்படக்கூடிய சம்பளம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

சூப்பர் ஸ்டார்:

இந்த படத்திற்கு அஜித்துக்கு 180 கோடி சம்பளம் என பேசப்பட்டிருக்கிறதாம். இதற்கு முன்பு குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருடைய சம்பளம் 163 கோடி அதை விட கூடுதலாக இந்த படத்திற்கு வழங்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இந்த படத்தில் 12 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

mohan

mohan

இது தொடர்பாக அவரிடம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பொழுது மோகன்லாலை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என அப்போதே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவருடைய 64வது படத்தில் இது நடந்தால் இது வேறொரு படமாக மாறும். அதுவும் ஆதிக் இயக்கத்தில் எனும் போது இன்னும் இந்த படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top