Connect with us

OTT: தமிழ் டூ மலையாளம்… இந்த வாரம் வெளியாக இருக்கும் ஓடிடி படம் மற்றும் வெப்சீரிஸ் செமையா இருக்கே!

latest news

OTT: தமிழ் டூ மலையாளம்… இந்த வாரம் வெளியாக இருக்கும் ஓடிடி படம் மற்றும் வெப்சீரிஸ் செமையா இருக்கே!

OTT: தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களின் இந்த வார ஓடிடி படம் மற்றும் வெப்சீரிஸ் குறித்த தகவல்கள்.

கேரளா கிரைம் ஃபைல்ஸ் சீசன் 1 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 2023ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படுகிறது.

ஒரு கொலை வழக்கை மையமாகக் கொண்டு, அஜு வர்க்கீஸ் மற்றும் லால் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற இதன் இரண்டாவது சீசன் மேலும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. முதல் சீசனை விட பெரிய ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் மற்றும் பால சரவணனின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜின் தி பெட். சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது.

லேட்டஸ்ட் வைரல் பாடலான மம்முட்டியான் பாடலை பயன்படுத்திய இன்னொரு திரைப்படம் பிரின்ஸ் அண்ட் பேமிலி. இப்படத்தினை பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நாளை ஜீ 5 தளத்தில் வெளியாக உள்ளது.

டில்ஜித் டோஸாஞ்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள டிடெக்டிவ் ஷெர்டில் ஒரு மர்மக் கொலை வழக்கை விசாரிக்கும் திடமான டிடெக்டிவ் கதையை மையமாகக் கொண்டது. இவருடன் போமன் இரானி, டயானா பென்டி, ரத்னா பாதக் ஷா, சங்கி பாண்டே, பனிதா சந்து மற்றும் சுமீத் வ்யாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படமும் ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லரான பைட் ஆர் பிளைட் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. பெரும்பாலும் நிறைய படங்கள் ரிலீஸாகவில்லை என்றாலும் இந்த லிஸ்ட் வார இறுதிக்கு செம தேர்வாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top