OTT: பிரபல நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் ஓடிடியில் ரிலீஸாகி இருக்கும் Blind Spot படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் விமர்சனத்தின் தொகுப்புகள்.
2025ம் ஆண்டு வெளியான Blind Spot தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி இருக்கிறது. கிரைம் திரில்லராக ரிலீஸாகி இருக்கும் இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் ராஷி சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம், மணமான பின்வரும் தம்பதிக்கு இடையே நிகழும் மர்மமான சம்பவங்களை மையமாகக் கொண்டது.
தம்பதியாக வாழும் ஜெய்ராம் மற்றும் திவ்யா வாழ்க்கையில், திவ்யாவின் மரணம் ஒரு தற்கொலை என்று முதலில் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் பின்னர் அது கொலை எனவும், அதைச் சூழ்ச்சி செய்தது யார் என்ற விசாரணையாக மாறுகிறது.
இந்தச் சூழ்நிலையில், நாயகனாக நவீன் சந்திரா ஜெய்ராமின் கண்ணோட்டத்தில், உணர்வுகளை நமக்கு கடத்தின் படத்தின் திரைக்கதையை வலுவாக்கி இருக்கிறார். இவருக்கு இனி போலீஸ் வேடமே கொடுக்கலாம். எங்குமே போர் அடிக்காமல் கூட்டி செல்கிறார். இப்படத்தை இயக்கியவர் ரகேஷ் வர்மா. அவரது இயக்கத்தில் உருவான இந்தப் படம் சைக்கலாஜிக்கல், மர்மம், குற்றம் என பல விஷயங்களை பேசுகிறது.
முக்கிய கதாபாத்திரங்களில் நவீன் சந்திரா பாராட்டைப் பெற்றுள்ளார். ராஷி சிங்கும் தன்னுடைய பாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆலி ரெஜா, ரவி வர்மா மற்றும் கேயாதிரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ரன்னிங் டைமிங் சுமார் 1 மணி 31 நிமிடங்கள் என்பது கூடுதல் பிளஸ்.
தொழில்நுட்ப ரீதியாக, படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்றவாறே அமைந்துள்ளது. மர்மம் மற்றும் சந்தேக கண்ணோட்டங்களை ரசிகர்களுக்கு அனுப்பவதில் இசை பெரிய பங்காகி இருக்கிறது.
எடிட்டிங் சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் அலுப்பை தருகிறது. திரைக்கதையில் ஆரம்பத்தில் வெகுவாகக் பரபரப்பை கொடுத்தாலும் இடைவேளைக்கு பிறகு சில இடங்கள் எளிதாக யுகிக்க முடிவதாக இருக்கிறது.
Blind Spot விமர்சன ரீதியாக, படம் சில இடங்களில் அலுப்பை தட்டினாலும் டெக்னிக்கல் அம்சங்கள் பாராட்டைப் பெற்றுள்ளன. “Blind Spot” ஒரு கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு செம டைம் பாஸாக அமையும்.
