பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. ஹீரோ ஆனதும் முதல் வேலையா லோகேஷ் செஞ்ச சம்பவம்

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கி இப்போது கூலி வரை ஒவ்வொரு படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். முதல் படமே மகத்தான வெற்றி. அதனை அடுத்து அவர் எடுத்த கைதி திரைப்படம் தான் அனைவருக்குமான ஆச்சரியம். ஒரே நாள் இரவில் ஒட்டுமொத்த படத்தின் கதையையும் சொல்லிவிட முடியுமா என்பதை நிரூபித்துக் காட்டினார் லோகேஷ்.

முழுக்க முழுக்க இரவில் நடக்க கூடிய கதையாக அதுவும் பக்கா ஆக்‌ஷன் படமாக கைதி படத்தை எடுத்து மாஸ் காட்டினார். மூன்றாவது படத்திலேயே விஜயுடன் இணைந்தார். ஏற்கனவே விஜய்க்கு ஒரு பெரிய ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். அவரை வைத்து அசத்தலான பக்கா கமெர்ஷியல் படத்தை மாஸ்டரில் தந்தார். அதிலிருந்தே லோகேஷின் மார்கெட் அதிகரிக்க தொடங்கியது.

ஒட்டுமொத்த சினிமா பார்வையும் லோகேஷ் மீது திரும்பியது. அடுத்ததாக கமலை வைத்து விக்ரம் என்ற மாபெரும் ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார். கமலின் தீவிர வெறியனான லோகேஷ் விக்ரம் படத்தை ரசிகர்களுக்கான படமாக மாற்றினார். அதுவரை கமலின் கெரியர் அவ்வளவுதான் என்றிருந்த நிலையை முற்றிலுமாக மாற்றியவர் லோகேஷ்தான்.

இப்படி அடுத்தடுத்து லைம் லைட்டில் ஜொலித்த லோகேஷ் இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்திருக்கிறார். தன் வாழ் நாளில் மொத்தமாக 10 படங்களை மட்டுமே எடுக்க போகிறேன் என்று சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஆனால் டைரக்‌ஷனுக்குத்தான் அவர் பிரேக் விட்டிருக்கிறாரே தவிற சினிமாவிற்கு இல்லை. அடுத்ததாக லோகேஷ் ஹீரோவாக களமிறங்க போகிறார்.

arun

arun

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறாராம். அந்தப் படத்தில் நடிப்பதற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை கற்பதற்காக தாய்லாந்த் சென்றிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அருண் மாதேஸ்வரன் படங்களும் பக்கா வன்முறை காட்சிகளாக இருக்கும். லோகேஷின் படங்களும் அப்படித்தான். இப்போது இருவரும் ஒரே படத்தில் இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment