latest news
யாரிமும் உதவி இயக்குனராக இல்லை இந்த கே.பி. ஆனா இயக்குனர் சிகரம் ஆனது எப்படி?
Published on
தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை. ஆனால் நேரடியாக இயக்குனராகி மாபெரும் வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இது எப்படி சாத்தியமானதுன்னு பார்க்கலாமா…
கே.பாலசந்தர் சிறுவயதிலேயே நாடகக்கலையின் மீது தணியாத ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக வித்தியாசமான சில நாடங்களை எழுதி, அரங்கேற்றினார். அதனால் சிறந்த நாடக ஆசிரியராகவும் புகழ் பெற்றார். பி.மாதவன் இயக்கத்தில் எம்ஜிஆரின் தெய்வத்தாய் என்ற படத்தில்; வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார்.
சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த் ஆகியவை இவரது வெற்றி பெற்ற நாடகங்கள். அதை திரைப்படங்களாகியும் வெற்றி பெற்றன. இந்தப் படங்களின் இயக்குனரும் கே.பாலசந்தர் தான்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் என்ற கதையைத் தான் பாலசந்தர் எதிர்நீச்சல் என்ற நாடகமாக மாற்றியுள்ளார் என்றார்கள். ஆனால் பாலசந்தரின் நாடகத்தைப் பார்த்ததும் ஜெயகாந்தன் இதற்கும் எனது நாடகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னாராம். அந்த நாடகத்தை திரைப்படமாக்கும்போதும் வெற்றிவாகை சூடினார்.
சௌகார் ஜானகி, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் எதிர்நீச்சல் படத்திலும் நடித்து மாஸ் காட்டினர். படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாகேஷ் படத்தில் அற்புதமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைநோக்குப் பார்வை, முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட கதைகளை எழுதி திரைப்படமாக எடுத்தார் கே.பாலசந்தர். இவரது படங்கள் எல்லாமே காலம் கடந்தும் பேசப்பட்டன. இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய இயக்குனர்கள் ஆனார். அந்த வகையில் இயக்குனர் சிகரம் ஆனார் கே.பாலசந்தர். கமல், ரஜினி என இரு பெரும் ஜாம்பான்களின் குருநாதர் என்றால் அது இவர்தான்..!
அரங்கேற்றம், அவர்கள், நினைத்தாலே இனிக்கும், அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு, மன்மத லீலை, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களை எடுத்து தமிழ்சினிமா உலகில் ஒரு ட்ரெண்ட்செட்டை உருவாக்கினார். அபூர்வ ராகங்கள் படத்தில்தான் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அந்தவகையில் கேபி ஒரு லெஜண்ட் இயக்குனர். வசந்த், சேரன், சமுத்திரக்கனி, வி.சேகர் ஆகியோர் பாலசந்தரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். பின்னாளில் இவர்கள் பெரிய இயக்குனர் ஆகி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளனர்.
TVK Vijay: தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் சென்றிருந்த போது அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...