பைலட்டாக இருக்கும் சங்கீதாவின் மகள்.. இவ்ளோ பெரிய பொண்ணா இவங்களுக்கு?

Published on: August 8, 2025
---Advertisement---

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என பல விருதுகளையும் வாங்கி ஒரு ஹீரோயின் ஆக முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை சங்கீதா. பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அந்த படத்திற்குப் பிறகு அவருடைய மார்க்கெட் அதிகரிக்க தொடங்கியது. தமிழை விட தெலுங்கில் நல்ல ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகையாக மாறினார்.

பூவே உனக்காக படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். தன் மகளின் படிப்பை பற்றியும் அவருடைய வேலையைப் பற்றியும் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் சங்கீதா .திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார் சங்கீதா. இவருடைய திருமணமும் விஜயின் திருமணமும் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் தான் நடந்திருக்கிறது.

விஜய் ,சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் அனைவருமே நடிகை சங்கீதாவை தான் நினைத்திருக்கிறார்கள். இவரை தொடர்பு கொண்டு பல பேர் விசாரித்தார்களாம். அவர்கள் அனைவரிடமும் நான் இல்லை அது வேறொரு சங்கீதா என சொன்னதாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். பூவே உனக்காக படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை இவர் காதலிக்கிறார் திருமணம் செய்யப் போகிறார் என தெரிந்ததும் விஜயின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என கேட்டதற்கு சங்கீதாவிடம் எதையும் சொல்லவில்லையாம்.

சரவணனை பார்த்த பிறகுதான் விஜய் ‘சொல்லவே இல்லை’ என கேட்டிருக்கிறார். அதன் பின் குழந்தை பிறந்த பிறகுதான் விஜயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் திருப்பாச்சி படத்தின் சமயத்தில் என்னுடைய மகளை அழைத்துக் கொண்டு விஜயை பார்க்க சென்றேன் என்றும் சங்கீதா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் .சங்கீதா குடும்பமும் அவருடைய கணவரான சரவணன் குடும்பமும் மிகப்பெரியது .

ஆனால் இவருக்கு ஒரே ஒரு மகள் தான். அவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. பள்ளி படிப்பை எல்லாம் முடித்துவிட்டு பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் சங்கீதாவின் மகள். ஆரம்பத்தில் இது சங்கீதாவுக்கு யோசனையாக இருந்ததாம். ஆனால் அவருடைய மகள் அந்த முடிவிலிருந்து மாறவே இல்லையாம் .அதனால் பள்ளி படிப்பை எல்லாம் முடித்துவிட்டு பைலட் ஆவதற்கான படிப்பை ஃப்ளோரிடாவில் தொடங்கி இருக்கிறார் சங்கீதாவின் மகள்.

sangeetha

sangeetha

அங்கு பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு படிப்பை எல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பியவர் இப்போது இந்தியாவுக்குள் பைலட்டாக ஒட்டிக் கொண்டிருக்கிறாராம் சங்கீதாவின் மகள். எப்போதாவது ஒருமுறை அவர் ஓட்டும் பைலட்டில் நாங்கள் பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு கொண்டிருக்கிறோம் என சங்கீதா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment