Connect with us

இந்த வாரம் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்!.. குபேராவுக்கு டஃப் கொடுக்கும் அமீர்கான்!…

latest news

இந்த வாரம் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்!.. குபேராவுக்கு டஃப் கொடுக்கும் அமீர்கான்!…

Kubera: 2025ம் வருடம் தமிழ் சினிமா உலகம் அதிக வெற்றிகளை பார்க்கவில்லை. இந்த வருடத்தில் துவக்கமான பொங்கலுக்கு வெளியான பெரிய நடிகர்களின் படங்களே பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. ஆனால், 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கியிருந்த மதகஜராஜா படம் நல்ல வசூலை பெற்றது.

அதன்பின் சூர்யாவின் கங்குவா படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. ஏனெனில், அஜித் ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை. விக்ரமுக்கு பல வருடங்களாக வெற்றிப்படம் அமையாத நிலையில் அவரின் வீர தீர சூரன் படம் வெளியானது.

ஆனால், அந்த படமும் வெற்றியை பெறவில்லை. இது எல்லாவற்றையும் விட மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த 5ம் தேதி வெளியான தக் லைப் படமும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. இத்தனைக்கும் இந்த படத்திற்கு பல கோடிகளை செலவு செய்து புரமோஷன் செய்தார்கள்.

இந்நிலையில்தான், இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 20ம் தேதி 3 புதிய படங்கள் வெளியாகவுள்ளது. இதில் தனுஷின் குபேரா படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

அடுத்து அதர்வாவின் டி.என்.ஏ படமும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு நாள் ஒரு கூத்து, பர்ஹானா, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதேபோல், அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பார்’ படமும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. இந்த 3 படங்களில் எது ரசிகர்களுக்கு பிடித்து ஹிட் அடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top