கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இப்படி ஒரு படமா? ரெடியா இருங்க.. கல்யாணம் ஆனா இப்படித்தான்

Published on: August 8, 2025
---Advertisement---

திருமணம் முடிந்து சமீபத்தில் தான் ஹனிமூன் ட்ரிப்பாக தன் கணவருடன் மாலத்தீவு சென்று இருந்தார் கீர்த்தி சுரேஷ். அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதையும் வென்றிருக்கிறார்.

தன்னுடைய குறும்பத்தனமான நடிப்பு எக்ஸ்பிரஷன் இவைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கூறி வந்த நிலையில் இவருடைய ஒரு படம் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது .

தெலுங்கில் உப்புக்கப்புறம்பு என்ற ஒரு நையாண்டி நகைச்சுவை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூலை நான்காம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்தப் படத்தை ஐ வி சசி இயக்கியிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராமபுரத்தில் நடந்த ஒரு நகைச்சுவை நாடகமாக இந்த படம் தயாராகி இருக்கின்றது. தென்னிந்தியாவில் இருக்கும் சிட்டி ஜெயபுரம் என்ற கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கின்றது.

அந்த கிராமத்தில் இருக்கும் கிராமவாசிகள் எதிர்கொள்ளும் ஒரு விசித்திரமான பிரச்சினையை பற்றி தான் இந்த படம் பேசப்போகிறது .இதைப் பற்றி படத்தின் இயக்குனர் சசி கூறும் பொழுது நீண்ட காலமாக திரைக்கு கொண்டு வர விரும்பிய ஒரு உலகத்தில் இருந்து ஈர்ப்பதாக இருக்கும் இந்த உப்புக்கப்புறம்பு என அந்த படத்தின் இயக்குனர் சசி கூறி இருக்கிறார்.

uppukappurambu

uppukappurambu

கீர்த்தி சுரேஷை பொருத்தவரைக்கும் திருமணத்திற்கு பிறகு சொல்லும்படியான வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. ஓடிடியானாலும் பரவாயில்லை என நினைத்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். திருமணமாகிவிட்டது. இனி யாருக்கு ஜோடியாக நடிக்க முடியும்? அதனால் இப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்துவிட வேண்டியதுதான் என இறங்கி விட்டார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment