மாநாடு 2 ரெடியாகப் போகுதா?.. சிம்புவுடன் கூட்டணி!.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே சொல்லிட்டாரே!..

Published on: August 8, 2025
---Advertisement---

நடிகர் சிம்புவுக்கு தொடர்ந்து தோல்வி படங்கள் பல வருடங்களாக அமைந்து வந்த நிலையில், அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்ததுதான் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு. ஹாலிவுட் படமான டெனட் திரைப்படத்தைப் போல வித்தியாசமாக டைம் லூப்பை வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா விளையாடி இருப்பார்.

உடல் எடை அதிகரித்து இருந்த நிலையில், வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்த போது பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெற்றி பெற்ற அந்தத் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படும் தோல்வியை தழுவியது.

அதன் பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தாலும் அந்த படம் சிம்புவுக்கு வெற்றி படமாக அமையவில்லை.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு பல வருடங்கள் கழித்து வெற்றியை பரிசளித்தது. அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை. பத்து தல திரைப்படம் வெற்றி தலையாக மாறவில்லை.

கடைசியாக கமல்ஹாசனை நம்பி சிம்பு நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் நிலை ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றுதான். சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பார்க்கிங் படத்தின் இயக்குனர் படத்தில் இருந்து சிம்பு வெளியேறி விட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், பிரபல யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானி சிம்புவின் மாநாடு திரைப்படத்தை பாராட்டி பேசிய வீடியோவை பகிர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ” திரும்பி வருவேன்” என பதிவிட்டு சிம்பு, வெங்கட் பிரபு, எஸ்.ஜே. சூர்யா மற்றும் யுவன் சங்கர் ராஜாவை டேக் செய்துள்ளார். சீக்கிரமே சிம்புவை வைத்து வெங்கட் பிரபு மாநாடு 2ம் பாகத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment