Connect with us

latest news

Pandian Stores2: சூப்பரா எஸ்கேப்பான தங்கமயில்… என்ன முடிவெடுக்க போகிறார் சரவணன்?

Pandian Stores2: விஜய் டிவியின் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ்2வின் இந்த வார புரோமோ வெளியாகி இருக்கிறது. இது கதையின் போக்கை மாற்றும் என்று கூறப்படுகிறது.

தற்போது விஜய் டிவியின் டாப் 2 வது சீரியலாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ்2. பெரும்பாலும் விஜய் டிவியில் சூப்பர்ஹிட் அடித்த சீரியல்கள் இரண்டாம் பாகமாக வெளிவந்தால் கண்டிப்பாக தோல்வி அடைந்து சில எபிசோட்களில் மூடுவிழா கண்டுவிடும்.

ஆனால் இதற்கு நேர்மாறாக விஜய் டிவியின் ஒரிஜினல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸின் இரண்டாம் பாகம் வெளியானது. முதலில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் போக போக ரசிகர்களிடம் அதீத ஆதரவை பெற்றது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் நம்பர் 2 சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தான் இருக்கிறது. இதில் கதிர் ராஜியின் கல்லூரி ரிசல்ட் வந்து இருக்கிறது. இதில் நான்கு பாடத்தில் கதிர் அரியர் வைத்து இருக்கிறார். அது ஒரு பக்கம் பிரச்னையாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் அரசியின் கல்யாண வாழ்க்கையின் பிரச்னை வேறு சென்று கொண்டு இருக்கிறது. செந்தில் தன்னிடம் கொடுத்த 10 லட்சம் பணத்தினை அரசு வேலைக்காக மாமனாரிடம் கொடுத்தது பாண்டியனுக்கு தெரிந்தால் பெரிய பிரச்னையாக வெடிக்கும்.

இதில் தப்பே பண்ணாத மீனாவிற்கு தண்டனை கொடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிகிரி படித்தாக பொய் சொல்லி கல்யாணம் செஞ்சிக்கொண்டு தங்கமயிலின் தகிடுத்தத்தம் தெரிந்து சரவணன் அவர் வீட்டில் விட்டு வந்து இருக்கிறார்.

தற்போது தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக காட்சி அமைக்கப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அவர் அப்பா, அம்மா அவரினை அழைத்துக்கொண்டு வந்து கோமதியிடம் சந்தோஷமாக சொல்லிக்கொண்டு சந்தோஷப்படுகிறார்.

இதில் சரவணன் சந்தோஷப்படுவது போல காட்டப்பட்டாலும் அவர் தங்கமயிலை மன்னிப்பார் என்றே நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் இவரின் வயசு பிரச்னை, நகை பிரச்னை எல்லாம் இருப்பதால் இனிமேலும் பிரச்னை வெடிக்கலாம் என்றே கூறப்படுகிறது.

Continue Reading

More in latest news

To Top