Connect with us

சின்மயிக்கு விஜய் ஆண்டனி கொடுத்த வாக்குறுதி.. இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

latest news

சின்மயிக்கு விஜய் ஆண்டனி கொடுத்த வாக்குறுதி.. இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

முத்த மழை:

தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை பாடலை மேடையில் சின்மயி பாடியதில் இருந்து தொடர்ந்து அவருக்கு ஆதரவு பெருகி வருகின்றன. தமிழ் சினிமாவில் அவர் படங்களில் பாடவும் டப்பிங் பேசவும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் சின்மயி. அவருக்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை எந்த ஒரு படங்களுக்கும் அவர் பாடவில்லை. டப்பிங் பேசவில்லை.

பெரும் ஆதரவு:

கடைசியாக லியோ படத்தில் மட்டும் த்ரிஷாவுக்காக டப்பிங் பேசி இருந்தார் சின்மயி. அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் தக் லைப் இசை வெளியீட்டு விழாவின் போது பாடகி தீ வராத சூழ்நிலையில் அவருக்கு பதிலாக அந்த பாடலை மேடையில் சின்மயி ஏறி பாட வேண்டியது இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்வுக்கு பிறகு சின்மயிக்கு இவ்வளவு ஆதரவு பெருகும் என்று நினைக்கவில்லை .

மாஸ் காட்டிய விஜய் ஆண்டனி:

அவர் மீண்டும் படங்களில் பாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்தது. அந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. அதனால் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழு அந்த படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவரிடம் சின்மயி பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

அவரை உங்கள் இசையில் பாட வைப்பீர்களா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி சீக்கிரமே படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்து இருக்கிறேன். அவரை நிச்சயம் என்னுடைய இசையில் பாட வைப்பேன் என கூறி இருந்தார். ஏற்கனவே நம்பியார் என்ற படத்தில் விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடி இருக்கிறார். அவருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஜய் ஆண்டனி இப்படி சொல்லி இருப்பது எந்த வகையில் சாத்தியமாகும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் கேட்கையில் அவர் சொன்ன கருத்து என்னவெனில் சின்மயிக்கு எதிராக திரையுலகமே கோர்ட்டில் முறையிட்டு இருக்கிறது.

ரஹ்மான் ஏன் இத செய்யவில்லை:

அப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் ஆண்டனி இப்படி சொல்லி இருப்பது சின்மயிக்கு அவர் தரும் ஆதரவாக தான் நான் பார்க்கிறேன். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை வைத்து தான் அடுத்து சின்மயி தமிழில் பாடுவாரா இல்லையா என்பது தெரியும். அப்படி இருந்தால் தெலுங்கில் கன்னடத்தில் என பாட வைத்த ஏ ஆர் ரகுமான் ஏன் தமிழில் மட்டும் பாட வைக்கவில்லை .அதனால் விஜய் ஆண்டனி இப்படி சொன்னது ஆதரவாகத்தான் நான் பார்க்கிறேன். நாளைக்கே அவரிடம் ஏன் இப்படி சொன்னீர்கள் என்று கேட்டால் கூட எனக்கு இது தெரியாது என்று தான் அவர் சொல்வார் என ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top