OTT Watch: அக்‌ஷய் குமார் – மாதவனின் காம்போவில் ஒரு ரியல் ஸ்டோரி… கேசரி சேப்டர் 2 எப்படி இருக்கு?

Published on: August 8, 2025
---Advertisement---

Kesari Chapter2: பாலிவுட்டில் அடிக்கடி செய்யும் சூப்பர் சம்பவமாக இந்த முறை ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கேசரி சேப்டர் 2. இப்படத்தின் பாசிட்டிவ், மைனஸ் சொல்லும் திரைவிமர்சனம்.

கேசரி படம் என்றாலே பெரும்பாலும் நினைவுக்கு வருவது போர்க்களம். ஆனால் இந்த “கேசரி சாப்டர் 2”, முழுக்கமுழுக்க ஒரு சட்டவழக்காக அரசியல் சார்ந்த வரலாற்று படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை தொடர்ந்து, அந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக சட்டத்தின் மையமாகப் போராடிய பிரிட்டிஷ் இந்திய வழக்கறிஞர் சி. சங்கரன் நாயர் அவர்களின் உண்மையான வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையை விசாரணை செய்யும் பணியை பிரிட்டிஷ் அரசு அவருக்கு அளிக்கிறது, அவர்களுக்குப் பக்கபலமாக ஒரு அறிக்கையை தான் அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அமிர்தசரில் பொது மக்களை, ஆயுதம் இல்லாமல் இருந்தவர்களை, ஜெனரல் ரெஜினால்ட் டையர் கொடூரமாக சுட உத்தரவிட்ட உண்மையை நாயர் கண்டறிகிறார்.

இந்தக் கொடூரமான உண்மை அவருடைய மனசாட்சியை உலுக்கியதால், அவர் “தி கிரௌன்” மற்றும் ஜெனரல் டையரை எதிர்த்து வழக்கு தொடர்கிறார். இந்த கதை, நீதிக்கான போராட்டத்தின் மூலம் வரலாற்றை மாற்ற முயன்ற ஒரு மனிதனின் துணிச்சலான பயணத்தைச் சொல்கிறது.

சங்கரன் நாயகராக அக்‌ஷய் குமாரும், அவருக்கு எதிராக வாதாடும் நெவேலி மெக்கின்லியாக மாதவன் நடித்து இருக்கிறார். இருவருமே நடிப்பில் கில்லி என்பதால் இந்த கோர்ட் டிராமாவை பார்ப்பது செம திரில்லிங்காக அமைந்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அனன்யா பாண்டே, ரெஜினா கசாண்ட்ரா தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை செமையாக செய்து அசத்தி இருக்கின்றனர். இப்படம் பரபரப்பாக செல்வதில் இங்குமே அலுப்பு இல்லாமல் செல்கிறது.

ஆனால் இப்படத்தில் இந்தி பதிப்பு மட்டுமே ஹாட்ஸ்டாரில் இருக்கிறது. தமிழில் இல்லை என்பதுதான் பெரிய குறை. ஆனால் இப்படம் ரசிகர்களுக்கு செம திரில்லிங்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே உண்மை.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment