Connect with us

Cinema News

எனக்காக சிம்ரன் பண்ண விஷயம்.. பப்லுவும் சிம்ரனும் இவ்ளோ நெருக்கமான நண்பர்களா?

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் பேசிய வீடியோ தான் வைரலாகி வருகின்றது. தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றியும் இப்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது நாள் வரைக்கும் அவருடைய மகனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பப்லு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக ஒரு மலேசியா பெண்ணுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பப்லு அந்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண்ணையும் பிரிந்து இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தன் மகனுக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார் பப்லு பிருத்திவிராஜ்.

இந்த நிலையில் பப்லுவை பற்றி நடிகை சிம்ரன் அவருடைய அனுபவங்களை பகிர்ந்த ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதில் நானும் பப்லுவும் டைம் மற்றும் அவள் வருவாளா போன்ற படங்களில் நடித்திருக்கிறோம். அந்த இரு படங்களுமே எனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்கள் .பப்லுவை பொறுத்தவரைக்கும் அவர் மிகச்சிறந்த கடின உழைப்பாளி. தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பவர்.

நானும் அவரும் நல்ல நண்பர்கள் என பல விஷயங்களை சிம்ரன் கூறி அந்த வீடியோவை பப்லுக்காக வெளியிட்டு இருந்தார். இதை பார்த்ததும் பப்லு மிகுந்த மகிழ்ச்சியில் சிம்ரன் வீடியோவை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவ்வளவு மேக்கப்புடன் தலையை நன்றாக வாரிக் கொண்டு பேட்டி கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை .எனக்காக அதை செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.

ஏனெனில் பெரும்பாலும் அவர் மிகவும் சாதாரணமாகத்தான் இருப்பார் .மேக்கப் எதுவும் இல்லாமல் வீட்டில் எப்படி இருப்பாரோ அதே மாதிரி தான் பொது இடங்களிலும் இருப்பார். ஆனால் இது எனக்காக பண்ணியிருக்கிறார் என நினைக்கிறேன். அதுமட்டுமல்ல நான் துவண்டு போகும் நேரத்தில் சிம்ரன் எனக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். அவர் கஷ்டமான நேரத்தில் நானும் அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என பப்லு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top