Connect with us

latest news

மாடர்ன் கேப்டனாக சண்முக பாண்டியன்… அதிரடியாக வெளியான படைத்தலைவன் படத்தின் திரை விமர்சனம்!

Padaithalaivan: சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் படைத்தலைவன் படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் திரைவிமர்சனம்.

வேலு (ஷண்முக பாண்டியன்) ஒரு காட்டில் வாழும் யானை பயிற்றுவிப்பவர் (மஹவுட்). அவர் யானையின் பெயர் மானியன். மானியனை குழந்தையைப் போலவே பராமரித்து வருகிறார். அவருக்கு யானைதான் நண்பன், குடும்பம், வாழ்நாள் துணை என்று வாழ்கிறார்.

ஒருநாள், சில தங்கத் திருடர்கள் மற்றும் கடத்தல்காரர்கள், மானியனை காட்டில் இருந்து கடத்திக் கொண்டு போகிறார்கள். வேலுவுக்கு இது பெரிய அதிர்ச்சியாகி விடுகிறது. மானியனை மீட்கவே அவர் பயணத்தை தொடங்குகிறார்.

ஒன்றும் தெரியாமல் தொடங்கும் இந்த மீட்பில் பயங்கரமான இடங்கள், விலங்குகள், வஞ்சகர்கள், பிரச்னைகள் என அவனை தொடர்ந்து கஷ்டப்படுத்துகின்றது. ஆனால் அவன் உறுதியுடன் முன்னேறுகிறான். இதற்கிடையில் விஜயகாந்த் ஒருகாட்சியில் தோன்றி அவருக்கு உதவுகிறார்.

பின்னர் மானியனை எப்படி கண்டுப்பிடிக்கிறார் என்பதுதான் மொத்த கதை. ஹீரோ சண்முக பாண்டியனை பார்க்கும் போது விஜயகாந்தின் இன்னொரு வெர்ஷன் போலவே இருக்கிறார். நடை, அவர் பார்வை மட்டுமல்லாமல் சண்டை காட்சிகளை பார்க்கும் போது கேப்டனாகவே கண்ணுக்கு தெரிகிறார்.

உதவி இயக்குனர் அன்பு தன்னுடைய கதையில் புதுமையை மிஸ் பண்ணி இருந்தால் கூட அதை திரைக்கதையில் மெருகேற்றிவிட்டார். ஒவ்வொரு காட்சிகளும் நம்மையே பிரமிக்க வைக்கிறது. ஆனால் இந்த கதை ஏற்கனவே கும்கி படத்தின் மூலம் தெரிந்தது என்றாலும் சண்முக பாண்டியன் நடிப்பே படத்திற்கு பிளஸாக அமைந்து இருக்கிறது.

மேலும் படத்தில் விலங்குகள் தான் முக்கியம் என்பதால் மற்ற நடிகர்கள் என்பதே குறைவுதான். அந்த வகையில் யுகி சேது, யாமினி சந்தர் உள்ளிட்டோர் கதையில் வந்து செல்கின்றனர். எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாகி இருக்கிறது. அவர் கேமரா பல இடங்களில் பூந்து விளையாடுகிறது.

மேலும் கிளைமேக்ஸ் கூட நிறைய ட்விஸ்ட்களை வைத்து இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு இரண்டு முக்கிய பிளஸ் இருக்கிறது. ஒன்று இளையராஜாவின் இசை தான். அதிலும் சண்டை காட்சியில் பொட்டு வச்ச பாடலை போட்டு சிலிர்க்க வைத்து விட்டனர்.

பின்னணி இசையில் எந்த குறையுமே இல்லை. அடுத்து ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த் ஒரு காட்சியில் தோன்றி இருக்கிறார். ஆனால் கோட் படம் போல இல்லாமல் அவரின் கண் கூட ஒரிஜினல் போல தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்து அப்ளாஸ் வாங்கி இருக்கின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top