Connect with us

மணிரத்னத்தின் ஈகோதான் படத்தின் தோல்விக்கு காரணமா? வைரலாகும் வீடியோ

latest news

மணிரத்னத்தின் ஈகோதான் படத்தின் தோல்விக்கு காரணமா? வைரலாகும் வீடியோ

தக் லைஃப்: கமல் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் தக் லைஃப். 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலும் மணிரத்னமும் இணைந்த திரைப்படமாக தக் லைப் திரைப்படம் அமைந்தது. அதனால் அனைவருமே நாயகன் படத்தின் இரண்டாம் பாகமா? நாயகன் படம் மாதிரியே இருக்குமா என்று தான் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்ததையும் விட படம் மோசமான விமர்சனத்தையே பெற்றது. கமல் மணிரத்தினம் என்றால் அது ஒரு தனி காம்போ. இரு லெஜெண்டுகள் இணையும் திரைப்படம் என்பதால் அதுவே ஒரு ஹைப்பை ரசிகர்களிடையே உருவாக்கி இருந்தது.

மீம்ஸ்களாக மாறிய தக் லைஃப்:

ஆனால் இந்த அளவு மோசமான திரை கதையாக இருக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை .படத்தை இப்போது வரை ட்ரோல் செய்து வருகின்றனர். த்ரிஷாவை வைத்து அப்பாவும் மகனும் சண்டை போடுவது தான் இந்த படத்தின் கதையா? வேறு என்ன இருக்கிறது என்றெல்லாம் மீம்ஸ்களாக உருவாக்கி படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கதை என்று இந்த படத்தில் எதுவுமே இல்லையே என்றும் ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

பாடல்கள்தான் ஆறுதல்:

படத்தில் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. பின்னணி இசையும் சிறப்பாக இருந்தது. சிம்புவின் நடிப்பு இந்த படத்திற்கு பிறகு அனைவருமே அறிவீர்கள் என கமல் ஒரு மேடையில் கூறியிருந்தார். ஆனால் போஸ்டரில் தான் சிம்புவின் அபார நடிப்பு தெரிந்தது. படத்தில் அந்த அளவு ஈர்ப்பை பெறவில்லை. இப்படி தக் லைப் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை சந்திக்கின்ற வேளையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

முழு ஸ்கிரிப்ட்:

அதில் மணிரத்தினம் கூறும் பொழுது இந்த படத்தை பற்றி கமலை சந்தித்தபோது அவர் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட்டை கொடுத்தார் .அதில் ஒரே ஒரு முடிச்சை மட்டும் எடுத்து அதிலிருந்து தான் நான் டெவலப் செய்தேன் எனக் கூறியிருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் கமல் வேறொரு பேட்டியில் கூறும் பொழுது நான் கொடுத்தது வெறும் ஐடியா மட்டும் அல்ல. முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்து விட்டேன். அதில் எனக்கு மட்டுமே தெரியும் அதிலிருந்து தான் மணி எடுத்தார் என்று. உங்களுக்கு தெரியாது. அதுதான் மணிரத்தினம்.

இதுதான் கமல்:

இதுக்கு நான் ஒத்துக் கொண்டேன் பாருங்க, முழு ஸ்கிரிப்டையும் கொடுத்தேன் பாருங்க அதுதான் நான் என அந்த இன்னொரு வீடியோவில் கமல் கூறியிருக்கிறார். இதைப் பற்றி நெட்டிசன்கள் கூறும் பொழுது கமல் ஸ்கிரிப்டை அப்படியே இயக்குவதற்கு பதிலாக மணிரத்னம் திரைக்கதையை மாற்றி அமைத்ததன் விளைவு தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் மணிரத்தினத்தின் சொந்த ஈகோ தான் படத்தில் ஒரு பெரிய குறையாக இருந்தது என்றும் கமெண்டில் கூறி வருகின்றனர். நம் நாட்டில் மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர் கமல் என்பது அனைவருக்குமே தெரியும். அதை அவருடைய முந்தைய படைப்புகளில் நாம் காணலாம் என இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top