Connect with us

Cinema News

மிஸ்ஸான ‘அருணாச்சலம்’ பட வாய்ப்பு.. ரஜினியிடம் ராதாரவி ரியாக்‌ஷன்

ராதாரவி: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒரு மிரட்டும் வில்லனாக தனது கணீர் குரலில் அனைவரையும் மிரட்டி பார்த்தவர் நடிகர் ராதாரவி. எதையும் தைரியமாக பேசுபவர். நடிகராக மட்டுமல்ல நடிகர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். அரசியலிலும் இவருடைய ஆளுமை என்பது மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கமல். அதை பல மேடைகளில் ராதாரவி கூறி இருக்கிறார்.

ரஜினி படம்தான் அதிகம்:

ஆனால் கமல் படங்களை விட ரஜினி படங்களில் தான் இவர் அதிகமாக வில்லனாக நடித்திருக்கிறார். அதை பற்றி ராதாரவி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். ரஜினியை பொறுத்தவரைக்கும் அவர் சிபாரிசு என யாருக்குமே எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் யாராவது ஏதாவது சொன்னால் நல்லா இருக்கா இல்லையா என்பதை மட்டும் சொல்வார். பட்டும் படாமலுமே இருப்பார் .ஒரு வேளை என்னை சரி என சொல்லிவிட்டு அந்த படத்தில் என்னால் ஏதாவது பிரச்சனை வந்து கடைசியில் உங்களால் தானே ராதாரவியை போட்டோம் என ரஜினியிடம் போய் நிற்பார்கள்.

அருணாச்சலம் மிஸ் ஆயிடுச்சு:

அதை அவர் விரும்ப மாட்டார். இதனால்தான் அவர் யாருக்குமே சிபாரிசு செய்ய மாட்டார். ஒரே ஒருமுறை என்னை நேராக அழைத்து சொல்லி இருக்கிறார். ஒரு கன்னட படத்தில் நடிப்பதற்கு என் காரில் நான் சென்று கொண்டிருக்கிறேன். அப்போது திடீரென ரஜினி போன் செய்து வரச் சொன்னார். நான் போனேன். ரெண்டு பேருமே கிண்டலாக ஏதாவது பேசுவோம் .ஒரு அட்வான்ஸ் தொகையை என்னிடம் கொடுத்து அருணாச்சலம் என்ற ஒரு படத்தை நான் எடுக்கிறேன். அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என சொல்லி அருணாச்சலம் ஃபைலை எடுத்து என்னிடம் காட்டி இதில் ஆர்ஆர் என போட்டிருப்பது உங்களுடைய வசனம் தான் என கூறினார்.

ரஜினி சொன்னது:

இதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து மீண்டும் என்னை அழைத்து என்னிடம் சொன்னார், நீங்கள் இந்த படத்தில் இல்லை என்று. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் அந்தப் படத்தில் நான் இருக்கிறேன் என சொல்லி இப்போது இல்லை என சொல்வதற்காக என்னை அழைத்திருக்கிறார் பாருங்கள். அதனால் அதற்கு நான் அவரை பாராட்டுகிறேன். எத்தனை பேர் இப்படி நேரில் அழைத்து சொல்வார்கள் என தெரியாது.

rajini

rajini

உருத்தியிருக்கும்:

அடுத்து அவர் சொன்னார், இந்த படத்தில் வில்லனை மூன்று வில்லன்களாக மாற்றி விட்டேன் என கூறினார், அதன் பிறகு நான் அவரிடம் சொன்ன வார்த்தை ‘சார் சினிமாவின் தலை எழுத்து என்னவெனில் இந்த திறமை அந்த அதிர்ஷ்டத்தை தேடி வர வேண்டியதாக இருக்கிறது சார்’ என கூறினேன். அவர் திரும்பவும் என்ன சொன்னீங்க எனக் கேட்டார். மறுபடியும் ‘நான் இந்த திறமை (என்னை காண்பித்து காட்டினேன்) அந்த அதிர்ஷ்டத்தை ’அவரை காட்டி குறிப்பிட்டேன்) தேடி வர வேண்டியது இருக்கிறது சார்’ என மீண்டும் கூறினேன். உடனே அவர் அடேங்கப்பா அடேங்கப்பா எனக் கூறினார். ஆனால் இது அவருக்கு உறுத்தலாக கூட இருக்கலாம். ஏனெனில் அவருக்கு இது புரிந்தது என்றால் கண்டிப்பாக உருத்தியிருக்கும் என ராதாரவி கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top