Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபாப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

குமார் மற்றும் சக்திவேல் தலை தெறித்துக் கொண்டு ஓட அதை மீனா வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தியா என மீனா தன்னை பாராட்டிக்கொண்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் கோமதி வர என்னடி அரசியிடம் பேசுனீயா எனக் கேட்க அதெல்லாம் இல்லை அத்தை. எதிர்த்த வீட்டில யாரோ வந்துட்டு போறாங்க. பிரச்னை போல இருக்கு. பின்னாடி குமாரும் அவங்க அப்பாவும் எங்கையோ ஓடுனாங்க எனவும் கூறுகிறார்.

பின்னர், சுகன்யா வர அவரை நிறுத்தி கோமதி என்ன விஷயம் எனக் கேட்கிறார். வருமானத்துறை அதிகாரி வந்து சோதனை பண்ணி கட்டு கட்டா பணத்தை எடுத்துட்டு போனாங்க என்கிறார். மீனா நேத்து தானே கட்டுக்கட்டா பணம் இருந்ததா சொன்னீங்க என்க ஆமா நானே கண்ணு வச்சிட்டேன் போல என்கிறார்.

கோமதி என் புருஷன் ஒரு கடைக்கே நல்ல வரி கட்டுறாரு. இவங்க ஏன் இப்படி பண்றாங்க எனச் சொல்லிவிட்டு செல்கிறார். ராஜி எங்க வியாபாரத்தில் எல்லாமே நல்ல வருமானம் வருது. அப்புறம் ஏன் இப்படி ஒரு வேலை என அவரும் திட்டி விட்டு செல்கிறார்.

செந்தில் தன்னுடைய மாமனாரை சந்தித்து பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் தானே எனக் கேட்க கண்டிப்பா கிடைக்கும் என்கிறார். அரசியின் கார் பணத்தினை தன் மாமனாரிடம் கொடுத்து விடுகிறார் செந்தில். பின்னர் கடையில் பாண்டியனை பார்க்க வருகிறார் சரவணன்.

அவர் வேலைக்கு லீவ் போட்டதை சொல்லாமல் வேறு காரணத்தை சொல்லி சமாளித்து பேசிக்கொண்டு இருக்கிறார். செந்தில் இதுகுறித்து கேட்க ஆனால் சரவணன் சமாளித்து விடுகிறார். தங்கமயில் வீட்டில் இருக்க அவர் வீட்டுக்கு சில பெண்கள் வருகின்றனர்.

முதலில் டூர் போவதாக சொல்ல பின்னர் மயிலின் கணவர் ஏன் அவரை கூட்டிட்டு வந்து விட்டு போனாரு. என்ன பிரச்னை எனக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களை மயிலின் அம்மா திட்டி வீட்டு விட்டு அனுப்புகின்றனர்.

இதையடுத்து மயிலிடம் நீ ஏன் இன்னும் இங்க இருக்க உன் புருஷன் உன்னை கூட்டிட்டு போற மாதிரி இல்லை. நீ இங்கையே இருக்க முடியாது. உன் புருஷன் வீட்டுக்கு போற வழியை பாரு எனச் சொல்லி விட்டு செல்ல மயில் அழுதுக்கொண்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *