Connect with us

Cinema News

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ல இருந்த பெரிய குறை.. எந்த ரிவியூவர்ஸும் ஏன் அத பேசல? சரமாரி கேள்வி

நீயா நானா ஆரம்பித்த விஷயம்: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ரிவ்யூவர்ஸ் மற்றும் படம் பண்ணுகிறவர்கள் இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதிலிருந்து சமூக வலைதளங்களில் ரிவ்யூவ் பற்றிய பல விமர்சனங்கள் பரவத் தொடங்கியது. சில பேர் பணம் வாங்கிக்கொண்டு ஒரு படத்தை பற்றி ரிவ்யூ செய்து வருகின்றனர் என சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை பட்டியலிட தொடங்கி விட்டார்கள்.

அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. இதைப் பற்றி ஒரு ரிவ்யூவர் ஆர் எஸ் கார்த்திக் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். நீயா நானா நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது முழுசா சொல்ல வேண்டிய சில விஷயங்களை அவர்களுக்கு தேவையான மாதிரி வச்சிக்கிட்டார்களோ என எனக்கு தோன்றியது. ரிவ்யூ என்பது ரொம்ப முக்கியம்.

இது மட்டும் ரிவ்யூ கிடையாது:

ஒரு படத்தை குறை சொல்வது மட்டும் ரிவ்யூ கிடையாது. படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற ஒரு பப்ளிசிட்டியை ஏற்படுத்துவதுதான் அந்த ரிவ்யூ. ஒரு சில ரிவியூவர்ஸ் இருக்கிறார்கள் அவர்கள் கொடுக்கும் ரிவ்யூ நல்லா இருக்கிறதோ இல்லையோ மக்கள் அந்த படத்தை போய் பார்ப்பார்கள். அப்படி பார்க்கும் பொழுது இப்படி ஒரு படம் வந்திருக்கிறது போல என்ற ஒரு பேச்சு வெளிவரும்.

எனக்குத் தெரிந்து ரிவ்யூ எப்படி இருக்கிறது என்றால் முழுக்க முழுக்க பணத்தை அடிப்படையாக வைத்து ரிவ்யூ மாறிவிட்டது. ஆரம்பத்தில் ஒரு சில பேர் மட்டும்தான் அப்படி இருந்தார்கள். ரிவ்யூவால் ஒரு படம் ஓடிடுமா என கேட்டார்கள். அப்படி ரிவ்யூவால் ஓடிய படம் தான் சேது. இப்ப இருக்குற மாதிரி கிடையாது. அந்த காலத்தில் உண்மையை எடுத்துரைத்து மனதில் தோன்றியதை எடுத்துச் சொல்வார்கள்.

கழுவி ஊற்றிய படம்:

அதுதான் ரிவ்யூ. இங்க இருக்குற ரிவ்யூவர்ஸ் எப்படி பேசுகிறார்கள் என்றால் அவர்களுடைய டேஸ்ட் என்ன என்பதை மட்டும் பற்றி தான் பேசுகிறார்கள். இங்க வருகிற ரிவ்யூ எல்லாமே தனி மனிதனுடைய டேஸ்ட் கருத்தே தானே தாண்டி அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய கருத்து கிடையாது. இவங்க எல்லாரும் கழுவி ஊற்றிய படம் இருக்கிறது. அரண்மனை 4. மக்கள் என்ன பண்ணார்கள். அந்த படத்தை பெரிய ஹிட் ஆக மாற்றினார்கள்.

மஞ்சுமெல் பாய்ஸ் ஏன் ஓடியது:

ரிவ்யூவால் ஒரு படம் ஓடும் என சொல்ல முடியாது அதே நேரம் ஓடாது என்றும் சொல்ல முடியாது. அபிஷேக் போன்ற மேதாவி அவர் எத்தனை படம் எடுத்திருக்கிறார் என்று தெரியாது. அவர் பேசும் போதே பல படங்களை எடுத்த மாதிரி பேசுவார். ஆனால் அவர் பேசும் போது நீ என்ன பாடம் எடுக்குறீயா இல்ல படம் காட்டுறீயா என்றுதான் மக்களுக்கு கேட்கத் தோன்றும். மலையாள படங்களில் எவ்வளவு பெரிய ஓட்டை இருந்தாலும் அதை எல்லாவற்றையும் பேசமாட்டார்கள். தமிழ் படங்களில் சின்ன ஓட்டை இருந்தால் பெருசா பேசுவார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கூஸ் பம்ப் என்ன என்றால் கண்மணி அன்போடு பாடல் ஒலித்ததுதான்.

karthick

karthick

ஆனால் படத்தின் ப்ளாட் என்ன என்றால் அந்த பசங்க போறாங்க. விழுறாங்க அவ்வளவுதான். அந்த பையன் விழுகிறான். எவ்வளவு அடி என சொல்ல முடியாது. அந்தளவுக்கு ஆழம். சட்டை எல்லாம் கிழியுது. பாறையில் அடித்து அடித்து போய் விழுகிறான். அவனை காப்பாற்றி மேலே கொண்டு வர்றாங்க. வேன்ல உட்கார்ந்து டீ குடிக்கிறான். இது எப்படி சாத்தியம். நமக்கு சாதாரணமாக தலையில் அடி பட்டாலும் நிலை குழைந்து விழுந்துவிடுவோம். ஆனால் இந்தப் படத்தில் இவ்ளோ பெரிய குறை இருந்தும் ஏன் எந்த ரிவ்யூவர்ஸும் அத பற்றி பேசல என கார்த்திக் கேட்டிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top