Connect with us

Cinema News

சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு கடுப்பான விமல்! அவர் சொல்றதுலயும் நியாயம் இருக்குல

Vimal: விமல் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இருவருமே ஒரே சமயத்தில் திரைத்துறைக்கு வந்தனர். ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் இருக்கும் இடமே வேற .உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் விமல் சினிமா க்ராப்பை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து சறுக்கலையே சந்தித்திருப்பார்.

பல பேரிடம் ஏமாந்த விமல்:

இப்போது தான் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் விமல். அவரைப்பற்றி பல விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. படப்பிடிப்பிற்கு வரும் பொழுது மது அருந்திவிட்டு தான் வருவார் என்றெல்லாம் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வந்தன. ஆனால் அப்படி கிடையாது என சமீபகாலமாக பேட்டிகளில் கூறி வருகிறார் விமல். ஆனால் திரைத்துறையில் என்னை பல பேர் ஏமாற்றி விட்டதாகவும் மோசம் பண்ணி விட்டதாகவும் விமல் கூறி இருக்கிறார்.

தேசிங்குராஜா 2:

இப்போது தான் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் விமல். கூத்துப்பட்டறையில் இருந்து நடிப்பு துறைக்கு வந்தவர் தான் விமல். இவரைப்போல விதார்த், விஜய் சேதுபதி என பல பேர் கூத்துப்பட்டறையில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் நண்பர்களாக தான் இருந்துள்ளனர். வரும் ஜூலை பதினோராம் தேதி விமல் நடிப்பில் தேசிங்குராஜா படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.

கடுப்படைய வைத்த கேள்வி:

அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் விமல். எந்த ஒரு பேட்டி கொடுத்தாலும் இவரிடம் கேட்கும் கேள்வி சிவகார்த்திகேயன் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். ஆனால் அவருடன் சேர்ந்து சினிமா துறையில் வந்த நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள் ஏன் என்ற கேள்வி தான். இதே மாதிரியான கேள்வியை தான் இன்றும் ஒரு நிருபர் விமலிடம் கேட்க இந்த கேள்வியை கேட்டு கேட்டு கடுப்பாகிவிட்டது.

vimal

vimal

இதே கேள்வியை நீங்களே பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். தயவு செய்து கேட்காதீர்கள் உங்கள் மேலேயே எனக்கு கடுப்பு வருகிறது என சொல்லி இந்த கேள்வியில் இருந்து பதில் சொல்வதை மறுத்துவிட்டார் விமல்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top