Mariselvaraj:இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற காலம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அல்லது இளைஞர்களுக்கு மற்றவர்களை பற்றி நினைக்க நேரமே இருக்காது. அப்படி இருக்கையில் அவன் என்ன ஜாதி? இவன் என்ன ஜாதி என்று பார்ப்பதற்கு ஏன் யோசிப்பதற்கு கூட நேரம் இருக்காது. அப்படியான ஒரு உலகத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில்தான் ஜாதி என்ற அடிப்படையில் ஏகப்பட்ட விஷயங்களை மக்களுக்குள் புகுத்தி பிரிவினை என்ற ஒன்றே வர ஆரம்பித்தது.
எல்லாமே இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் நமக்கு அதைப் பற்றி யோசிக்கவே நேரமில்லை. பிறக்கிற குழந்தைகளுக்கும் அது பற்றி தெரியவும் தெரியாது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தி ஜாதி என்றால் என்ன? ஏன் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் ? அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? ஆதிக்கம் பண்ணுகிறார்கள் என்பதை எல்லாம் ஒரு படத்தின் மூலம் வெளிப்படுத்தி மீண்டும் அதை பற்றி ஆராய வைக்கிறார்கள் ஒரு சில இயக்குனர்கள்.
பரியேறும் பெருமாள்:
அதனாலயே ஜாதிய இயக்குனர்கள் என்ற பெயரால் அவர்கள் முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக மாரி செல்வராஜ் பா. ரஞ்சித் இவர்கள் வந்த பிறகுதான் ஜாதி என்ற ஒரு பெயர் கோடம்பாக்கத்தில் இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். அந்த வகையில் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. ஜாதியின் பெயரை குறிப்பிடாமல் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என பாகுபடுத்தி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் எவ்வாறெல்லாம் முட்டி மோதுகிறான் அவனை எவ்வாறெல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்கும் படமாக அமைந்தது தான் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கதிர் ஹீரோவாக நடித்திருப்பார்.
ஷாக்கான ஹீரோ:
ஆனால் முதன் முதலில் இந்த படத்தின் ஹீரோ இவர் தான் என ஆரம்பத்திலேயே மாரி செல்வராஜ் நினைத்த ஹீரோ அதர்வா. இதை இன்று டிஎன்ஏ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதர்வா மேடையில் இருக்கும் பொழுது மாரி செல்வராஜ் கூறி அதர்வாவுக்கே ஷாக் கொடுத்திருக்கிறார். இந்த கதையை அதர்வாவிடம் சொன்னபோது அவர் வேறு ஒரு படத்தில் பிசியாக இருந்தாராம்.
அதனால் கால்சீட் கிடைக்கவில்லை என்று மாரி செல்வராஜ் கூறினார். ஆனால் முரளி பையன். அதனால் அவருடைய மகனும் நம்மை மாதிரி தான் இருப்பான். இந்த படத்தை அதர்வாவை வைத்து எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் அவரைப் பார்க்க சென்றேன் .கால்ஷீட் பிரச்சினையால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை .அதனால் மிகவும் வருத்தப்பட்டேன்.
adharva
வருத்தப்பட்ட மாரிசெல்வராஜ்:
ஏனெனில் நான் இந்த சினிமாவிற்கு புதிது. அவர் முரளியின் மகன். அவரே இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லும்போது வேற ஹீரோ யாரு ஒப்புக்கொள்வார் என்ற ஒரு தயக்கம் என்னிடம் இருந்தது. இதை என்றாவது அவரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இப்போது இந்த மேடையில் சொல்கிறேன் என மாரி செல்வராஜ் இந்த தகவலை கூறினார்.
