Mutha Mazhai: தக் லைப் திரைப்படம் ஒரு பக்கம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அந்த படத்தில் அமைந்த முத்தமழை பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் சின்மயி குரல் தான். ஆல்பத்தில் அந்த பாடலை பாடியது பாடகி தீ. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தீ வர முடியாத காரணத்தால் அந்த பாடலை சின்மயி மேடையில் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எதேச்சையாக சின்மயி பாட சமூக வலைதளங்களில் அவருடைய குரல் மிகவும் பாப்புலராக மாறியது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் பாடவும் டப்பிங் பேசவும் சின்மயிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பாடலை அவர் பாடியதன் மூலம் மீண்டும் அவருக்கு மக்களின் ஆதரவு பெருக தொடங்கியது. இன்று வரை சமூக வலைதளங்களில் சின்மயி மிகவும் ட்ரெண்டிங்காக மாறி இருக்கிறார்.
பழச தோண்ட ஆரம்பிச்சாச்சு:
பல youtube சேனல்கள் அவரை தொடர்ந்து பேட்டி எடுத்து வருகின்றனர். ஏன் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. டப்பிங் யூனியனுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என்பதைப் பற்றி சின்மயிடம் கேட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல மீடூ பிரச்சனையில் வைரமுத்துவுக்கும் அவருக்கும் இருக்கும் பிரச்சனை இது எல்லாம் மீண்டும் கிளர ஆரம்பித்து விட்டது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாடல் ஹிட்டானால் அந்தப் பாடலை ரீ கிரியேட் செய்து பல பேர் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருவார்கள்.
நாஞ்சில் விஜயன் வெர்ஷன்:
அந்த வகையில் முத்தமழை பாடலை விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் அவருடைய வெர்ஷனில் ரீ கிரியேட் செய்திருக்கிறார். இதுவரை யாருமே இந்த பாடலை இப்படி முயற்சி செய்ததில்லை. நாஞ்சில் விஜயன் வெர்ஷனில் இப்போது முத்தமலை பாடல் வேற லெவலில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் பெரும்பாலும் பெண் வேடத்தில் வந்து காமெடி செய்யக் கூடியவர் நாஞ்சில் விஜயன்.
அவருடைய ஜோக்குக்கு வரவேற்பு இல்லையென்றாலும் அவர் போடும் பெண் வேடம் மக்களை சிரிக்க வைக்கும். அந்த வகையில் முத்த மழை பாடலையும் பெண் வேடமிட்டு ஒரு பெண் ஃபீல் பண்ணி பாடினால் எப்படி இருக்கும் என்பதை நாஞ்சில் விஜயன் ரி கிரியேட் செய்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் நாஞ்சிலு முத்த மழையை மொத்தமா செதச்சி புட்டீயே என்று கிண்டலடித்து வருகின்றனர்.
