Connect with us

Cinema News

ஜெயிலர் 2-விலும் ஒரு குத்து பாட்டு!.. காவாலா மாதிரி ஹிட்டடிக்க கலாநிதி மாறன் காசு கொட்றாரே!..

Jailer 2: சில படங்கள் ஒரு பாட்டாலேயே ஓடிவிடும். ஒரு படத்தின் கதை, திரைக்கதை, ஹீரோ கூட காப்பாற்றாத படத்தை ஒரு பாட்டு காப்பாற்றிவிடும். இதற்கு தமிழ் சினிமாவில் நிறைய உதாரணங்கள் உண்டு. அப்படி ஒரு பாடல்தான் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடல். ரஜினிக்கு ஒரு ஹிட் தேவை என்கிற சூழ்நிலையில் நெல்சன் இயக்கிய படம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

ரஜினிக்கு அண்ணாத்த கை கொடுக்கவில்லை. விஜயை வைத்து நெல்சன் இயக்கி வெளியான பீஸ்ட் படமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், நெல்சனை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. அப்படி உருவான ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் வினாயகன் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும், ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், மகனாக வசந்த் ரவியும் நடித்திருந்தனர். மேலும், காமெடிக்கு யோகிபாபு இருக்க, கெஸ்ட் ரோலில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த அப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அவர் கொடுத்த பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய காரணமாக இருந்தது.

குறிப்பாக தமன்னா இடுப்பை குலுக்கி குலுக்கி நடனமாடிய காவாலா பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் ரஜினி பெரிதாக நடனம் ஆடியிருக்கமாட்டார். ஆனால், தமன்னா போட்ட குத்தாட்டத்தில் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. ஜெயிலரின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், இப்போது ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை உருவாக்கி வருகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திலும் காவாலா போல ஒரு பாடல் வருகிறதாம். இந்த பாடலை சமீபத்தில் எடுத்திருக்கிறார்கள். சாண்டி மாஸ்டர் நடன அசைவுகளை அமைத்திருக்கிறார். காவாலா போல இந்த பாடலும் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் அதிக செலவு செய்து இப்பாடலை எடுத்திருக்கிறார்களாம்.

இந்த படத்திற்காக டி.ராஜேந்தரும், அனிருத்தும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இதுதான் அந்த பாடலா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top