Connect with us

Cinema News

குட்டி தனுஷா இருப்பார் போல! சித்தப்பா பாடலுக்கு வைஃப் செய்த செல்வராகவன் மகன்

தன்னுடைய அசுர வளர்ச்சியால் இன்று ஒரு நடிப்பு அசுரனாக மாறி இருக்கிறார் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ் முதல் படத்திலிருந்து யாருப்பா இந்த பையன் என கேட்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். அதிலிருந்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த தனுசுக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகியது.

ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கவில்லை. அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஏற்றவாறு படங்களை பண்ண தொடங்கினார். அந்த வகையில் அசுரன் திரைப்படம் இவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் தான் அவருடைய அபார நடிப்பை பார்க்க முடிந்தது. அந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து கர்ணன் படமும் ஒரு முக்கியமான படமாக மாறியது. தொடர்ந்து நடிகராக வந்த தனுஷ் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். பவர் பாண்டி என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து ராயன் திரைப்படத்தை இயக்கினார். அதில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததனால் அடுத்த வெற்றிமாறனோ இருப்பாரோ என்று தனுஷை விமர்சித்தனர்.

இப்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார் தனுஷ். அந்தப் படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஹாலிவுட் பாலிவுட் என பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து அவருடைய வேலையில் கரெக்டாக இருக்கிறார் தனுஷ். இன்னொரு பக்கம் ஒரு தந்தையாகவும் அவருடைய கடமையை சரியாக செய்து வருகிறார்.

dhanush

dhanush

தனுஷ் எப்போதுமே அவருடைய அப்பா, அம்மா, அண்ணன் ,சகோதரிகள் இவர்கள் மீது அளவற்ற அன்பை கொட்டுபவர். அண்ணன் சொல்றதை தட்டாமல் கேட்டு நடக்க கூடியவர் தனுஷ். இந்த நிலையில் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவனின் இளைய மகன் தன் வீட்டில் தனுஷின் பாடலை போட்டி அந்த பாடலுக்கு குத்தாட்டம் ஆடி வருகிறார். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.


author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top