Connect with us

latest news

சீரியல் நடிகை கண்மணிக்கும் சன் டிவி தொகுப்பாளருக்கும் புதிய பொறுப்பு!.. அம்மா, அப்பா ஆகிட்டாங்க!..

கடந்த 2024ஆம் ஆண்டு தொகுப்பாளர் அஸ்வத் மற்றும் சீரியல் நடிகை கண்மணி இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் இன்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கண்மணி தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அஸ்வத் ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், முக்கியமாக சன் டிவியில் பணிபுரிகிறார். அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், மேலும் அவரது இயல்பான பேச்சு மற்றும் நகைச்சுவை உணர்வு ரசிகர்களிடையே அவருக்கு தனி வட்டத்தையே உருவாக்கி கொடுத்திருக்கிறது. மேலும், அஸ்வத் ரியாலிட்டி ஷோக்கள், நேர்காணல், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் போன்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் இடையே மிக பிரபலமானார் கண்மணி. அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிப்பரபான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், கண்மணி வயிற்றில் குழந்தையுடன் தேவையானி நடித்த நிழர்குடை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கண்மணி மற்றும் அஸ்வத் இருவரும் காதலித்து வருவதாக அறிவித்த சில நாட்களிலெயே நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். தான் கர்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் கண்மணி. மெட்டர்னிட்டி புகைப்படங்களையும் வளைகாப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று அஸ்வத் மற்றும் கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். அதில் நாங்கள் ஒரு காதல் கதை எழுதினோம் ஆனால், வாழ்க்கை ஒரு தொடர்ச்சியுடன் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. எங்களின் வாழ்க்கை பயணம் ஒரு புதிய திருப்பத்துடன் தொடர்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு சின்ன திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top