Connect with us

Cinema News

‘கூலி’யில் மிரட்ட வரும் ரைமிங் மன்னன்.. தெறிக்கப் போகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தற்போது ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினியின் 171 வது திரைப்படம் தான் கூலி. ஃபேன் இந்தியா திரைப்படமாக அது உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா என எல்லா மொழிகளிலும் இருக்கும் பிரபலமான நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து விட்டன. படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் கொண்டு வருவதாக திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கூலி படத்தின் முதல் சிங்கிள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு பெரிய நடிகரின் படம் மக்களை ரிலீஸுக்கு முன்பே ரீச் ஆக வைக்க படக்குழு பல வழிகளில் முயற்சிப்பார்கள். அதை வித்தியாசமான ப்ரொமோஷனிலோ அல்லது வேறு விதமாகவோ எப்படியாவது படத்தைக் கொண்டு போக முயற்சிப்பார்கள். அந்த வகையில் கூலி படத்தில் இன்னும் ஹைப் ஏற்ற டி ராஜேந்திரனை படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் .

tr

tr

ஆம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை டி ராஜேந்திரன் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து தான் பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனுடைய ரெக்கார்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்ததாம். கூடிய சீக்கிரம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தகவல் வந்திருக்கிறது.டி ராஜேந்திரன் வாய்ஸ் என்றால் அது ஒருவகையான வைப்தான். ஆடத் தெரியாதவர்களையும் ஆட வைத்துவிடும் அவருடைய குரல்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top