நாகார்ஜுனா மகன் திருமணத்துக்கு வராத அல்லு அர்ஜுன்!.. அந்த கசப்பான சம்பவம் தான் காரணமா?..

Published on: August 8, 2025
---Advertisement---

நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அகில் அக்கினேனி ஜைனப் ராவ்ஜியை 2025 ஜூன் 6ம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து, ஜூன் 8, 2025 அன்று ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அகில் மற்றும் ஜைனப் காதலித்து வந்தனர், கடந்த 2024ம் ஆண்டு அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், அகிலுக்கு 30 வயதும், ஜைனப்பிற்கு 39 வயதும் ஆகிறது, இந்த வயது வித்தியாசம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து தற்போது அவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அகிலின் வரவேற்ப்பு விழாவில் சிரஞ்சீவி, ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு, நானி, சூர்யா, கிச்சா சுதீப் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய அரசியல் பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ள நிலையில் அல்லு அர்ஜூன் வரவேற்பு விழாவில் பங்கேற்காமால் இருந்ததற்கு என்ன காரணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க வந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததால் அல்லு அர்ஜூனை கைது செய்ய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். மேலும் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு போதிய ஆவணங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். எனவே ரேவந்த் ரெட்டி திருமணத்திற்கு வந்ததால் கூட அல்லு அர்ஜூன் வராமால் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மட்டுமின்றி பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் பிசியாக உள்ள நிலையில், வராமல் இருந்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment