Connect with us

Cinema News

கமல் சொன்னதுக்கு ஆதாரம் இருக்கிறதா? திடீரென சீண்டிய சரத்குமார்..

தற்போது கமல் நடிப்பில் தக் லைப் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு ,திரிஷா ,அசோக் செல்வன் என எண்ணற்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

ராஜ்கமல் நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படத்தில் உள்ள அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை ஏகப்பட்ட பிரச்சனையில் இந்த படம் இருந்தது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது தான் எனக் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது.

அதிலிருந்து கன்னட அமைப்பினர் கமலுக்கு எதிராக இந்த விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர். கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நீதிமன்றம் மூலமாக இந்த பிரச்சினையை கொண்டு போனார்கள். கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது . ஆனால் கமல் அவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

அதனால் கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் கமல் பேசியதில் ஆதாரம் இருக்கிறதா என சரத்குமார் கேட்டிருக்கிறார். இதை பற்றி சரத்குமார் மேலும் கூறும் பொழுது, திரையுலக நிகழ்ச்சியில் கமல் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. தமிழ் மூத்த மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தமிழில் இருந்துதான் கன்னடம் வந்ததா என்பதற்கு கமலிடம் ஆதாரம் இருக்கிறதா என தெரியவில்லை.

கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே பிரச்சினை உருவாக்கும் விதமாக கமல் பேச்சு அமைந்துவிட்டது. கமல் சொன்னது உண்மை என சீமானை தவிற வேறு யாரும் கூறவில்லை என சரத்குமார் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top