Connect with us

latest news

விஜய் டிவியின் அய்யனார் துணை மற்றும் மகாநதி சீரியலின் இந்த வார எபிசோட்கள் எப்படி இருக்கும்?

Vijay Tv: விஜய் டிவியில் தற்போது வைரலாக இருக்கும் அய்யனார் துணை மற்றும் மகாநதி சீரியலில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்கள் குறித்த சிறப்பு பார்வை.

மகாநதி: விஜயை தற்போது வெண்ணிலாவிடம் இருந்து காப்பாற்றி விட்டார் காவேரி. ஆனால் பசுபதி மற்றும் ராகினியிடம் உங்களால் தான் என்னுடைய விஜய் என்னை விட்டு பிரிந்தான் எனக் கூறி சண்டை போடுகிறார்.

அப்போ நடந்த தகராறில் வெண்ணிலா கீழே விழுந்து இறந்து விடுகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜய் மீது சந்தேகம் உருவாகி விடுகிறது. இதனால் அவர் தலைமறைவாக இருக்கிறார். தற்போது காவேரி மருத்துவமனை செக்கப்பிற்கு வந்து இருக்கிறார்.

விஜயிடம் கால் செய்து இதை சொல்ல தன் பிள்ளையை பார்க்க விஜய் முகம் மூடி அங்கு வந்து விடுகிறார். தற்போது போலீஸ் வேறு வாசலில் இருக்க விஜயை காவேரி தப்ப வைத்து விடுவார் என்றே தோன்றுகிறது. அடுத்த வாரம் வரை இந்த எபிசோட்கள் பரபரப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.

அய்யனார் துணை: அண்ணன் தம்பிகள் பற்றிய கதை என்பதால் இந்த சீரியல் பரபரப்பாக இருக்கிறது. இதில் சேரன் மற்றும் கார்த்திகாவிற்கு நிலா திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் கார்த்திகா அம்மாவால் அந்த கல்யாணம் நடக்காமல் போகிறது.

தற்போது கார்த்திகாவிற்கு இன்னொருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது. இதனால் சேரனுக்கு உடனே கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்து இன்னொரு பொண்ணை பார்த்து விடுகிறார்கள். சேரன் அந்த பொண்ணை சந்தித்து பேச நீங்கள் தனிக்குடித்தனத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்கிறார்.

இதனால் சேரன் வேண்டாம் என வந்துவிட வீட்டிற்கு வந்து தன் தம்பியிடம் எனக்கு நீங்க தான் முக்கியம் எனக் கூற அண்ணனை கட்டிக்கொண்டு அழுதுக்கொண்டு இருக்கின்றனர். இன்னொரு ஹீரோயின் விரைவில் எண்ட்ரியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in latest news

To Top