Connect with us

Cinema News

எத வேணாலும் மன்னிச்சுடுவேன்.. இத மட்டும் மன்னிக்க மாட்டேன்.. மணிரத்னத்துக்கு இது தேவதையா?

கடந்த ஐந்தாம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல், சிம்பு ,த்ரிஷா ,அசோக் செல்வன் ,அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி ,நாசர் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார் .படத்தை ராஜ்கமல் நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது.

படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற ஒரு சந்தேகமும் எழுந்தன .அதற்கு காரணம் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசும் பொழுது கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூறினார். இது பெரிய சர்ச்சையாக மாறி நீதிமன்றம் வரை சென்று கமல் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று கூறினார்கள்.

அதனால் கர்நாடகாவை தவிர மற்ற பகுதிகளில் இந்த படம் வெளியானது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமல்ல மணிரத்தினம் அவருடைய பாணியில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறி வருகிறார்கள் .திரைக்கதை என்பதே இந்த படத்தில் இல்லை என்றும் பேசிப் பேசியே சாகடிக்கிறார்கள் என்றும் கூறினார்கள் .

மணிரத்னம் படத்தில் வன்முறை காட்சிகள் என பெரும்பாலும் இருக்காது .ஆனால் இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறைகளாகவே இருக்கின்றன என்றும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மணிரத்னம் கலாச்சார புரட்சியே செய்து இருக்கிறார் என கூறுகிறார்கள். அதாவது கமல் சிம்பு அப்பா மகன் போல் நடித்து இருக்கிறார்கள்.

அதனால் கமல் ஜோடியாக இருக்கும் த்ரிஷாவை சிம்புவும் அடைய ஆசைப்படுவதாக காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் இன்னொரு வசனமும் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதாவது எத வேண்டுமானாலும் மன்னிச்சிருவேன். த்ரிஷாவை சிம்பு கரெக்ட் பண்ண ஆசைப்பட்டது கூட மன்னித்துவிடுவேன். ஆனால் ‘என்னோட தங்கச்சிய தேடப் போய் தானே இவ்வளவு கூட்டிட்டு வந்த. அப்போ இவ எனக்கு தான் சொந்தம்னு’ சிம்புவுக்கு டயலாக் கொடுத்த பாரு அதை மட்டும் மன்னிக்க மாட்டேன் மணி என ஒரு வசனத்தை டேக் செய்து மணிரத்னத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top