Connect with us

latest news

Siragadikka Aasai: மீண்டும் சிக்கிய ரோகிணி… திருட்டுத்தனத்தை நிறுத்திடு அண்ணாமலைக்கே கோபம் வந்துச்சு

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அருண் தான் பூ ஆர்டருக்கு காசு கொடுத்தார் என்பதை மீனா கூற முத்து கோபமாகி சத்தம் போடுகிறார். அவரை சமாதானம் செய்து அண்ணாமலை அனுப்பி விட்டு மீனாவிடம் அருண் குறித்து விசாரிக்க சொல்கிறார். அவர் சரியெனப்பட்டால் குடும்பமா கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்கிறார்.

ரவியை பார்க்க ஸ்ருதி ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். நம்ம ஹோட்டலுக்கு 30 பேர் உக்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு கிச்சன் எப்படி இருக்கணும் சொல்றீயா எனக் கேட்க ரவி அந்த ஹோட்டல் இப்போ வேண்டாம் என்று நான் சொன்னேனே எனத் திட்டிவிட்டு செல்கிறார்.

அப்போ வரும் நீத்து நீங்க தான் போய்ட்டீங்க. ரவியையும் அழைக்கிறீங்களே என்கிறார். அவன் லெவல் அவனுக்கு புரியலை என ஸ்ருதி திட்ட நான் வேணா ரவிக்கிட்ட உங்களுக்கும் கேர் எடுத்துக்க சொல்லட்டா என நீத்து கூற ஸ்ருதி உங்க வேலையை பாருங்க எனத் திட்டி விட்டு செல்கிறார்.

ரோகிணி வீட்டிற்கு வரும் பெரிய லாபம் பார்த்ததை சொல்ல விஜயா ஆச்சரியத்துடன் அந்த பணத்தை வாங்கி பார்த்து கொண்டு இருக்கிறார். என்ன செஞ்ச எனக் கேட்க பழைய ஜாமான்களை விலைக்கு எடுத்து கொண்டதாக சொல்கிறார். இதை கேட்டு விஜயா திட்டுகிறார்.

இல்ல ஆண்ட்டி பழசை வாங்கி புது பொருட்களுக்கு விலை ஏற்றி விற்றதாக சொல்லுகிறார். இதை கேட்கும் அண்ணாமலை நீ செஞ்ச விஷயம் சரியில்லை. இப்படி செய்றது நம்மளுக்கு நல்லது இல்லை என்கிறார். மீனா டெக்கரேஷன் ஆர்டர் கிடைக்க கமிஷன் கேட்டா கூட தரமாட்டாள். அவள் உழைப்பை நம்புவாள் எனச் சொல்லி செல்கிறார்.

இதை கேட்ட ரோகிணி ஆண்ட்டி இப்படி அங்கிள் சொல்லி போறாரே எனக் கேட்க அவரை விடு என்கிறார். இவ பெரிய பணக்காரியா இருந்தா நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படணும் என நக்கலடிக்கிறார். மனோஜ் எதோ பேச அதை தனக்கு சாதகமாக எங்க ரெண்டு பேரையும் கடைக்கு அனுப்புனா நிறைய லாபம் செய்வோம் எனச் சொல்லுவதாக சொல்கிறார்.

விஜயா எனக்கு என்னமோ இந்த டைமை பயன்படுத்தி நீ உனக்கு தோன்றதை சொல்ற மாதிரி தெரியுது என்கிறார். இதையடுத்து ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ய அவர் பெற்றோர் காப்பாற்றி முத்து காரில் அழைத்து மருத்துவமனைக்கு வருகின்றனர்.

பின்னர் அந்த அம்மா தன் கணவரை திட்டிக்கொண்டு இருக்கிறார். பிடிச்சவனை கட்டிக்க விடாம இப்படி பண்ணிட்டீயே என்கிறார். பின்னர் முத்துவுக்கு நன்றி சொல்லி அவருக்கு பிடிச்சவனை கட்டி வைக்க அறிவுரை சொல்லுங்க என்கிறார். இதை கேட்கும் மீனா அறிவுரை சொல்லுங்க என நக்கலாக சொல்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top