Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசி கீழே இறங்கி வர குமாரும் வருகிறார். நாங்க ஹோட்டலுக்கு சாப்பிட போறோம் எனச் சொல்லி அரசியை அழைக்கிறார். அம்மா, சித்தி அவரை அனுப்பி அரசி டிரெஸ் மாத்திட்டு வரேன் என்கிறார். இதுவே நல்லா தான் இருக்கு எனச் சொல்லி அழைத்து செல்கிறார்.
இதை பார்க்கும் அப்பத்தா உங்க இரண்டு பேரு புருஷன்களுக்கு என் பேரன் சரியா இருக்கான். கோமதி பொண்ணு எல்லாத்தையும் மாத்திட்டா என சந்தோஷமாக சொல்லுகிறார். காரில் சென்று கொண்டு இருக்கும் போது அரசியை குமார் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
என் வீட்டுக்கு வந்து நீ உட்கார்ந்து இருக்க. அதான் உன்னை மொத்தமா தொலைக்க வந்து இருக்கேன். இங்க நிறைய கரடி, நரி எல்லாமே அலையும். முடிஞ்சா தப்பிச்சிக்கோ. காலையில் இருந்தா அப்படியே எங்கையாது ஓடிடு என அரசியை இழுத்து வெளியில் தள்ளுகிறார்.
காரில் ஏறி சென்று விடுகிறார். அரசி பயந்து கொண்டே இருக்கிறார். தொடர்ந்து அழுது கொண்டே அங்கையே நிற்கிறார். குமார் தன் நண்பர்களை பார்க்க செல்ல அவர்கள் புதுமாப்பிள்ளை டிரீட் கொடு என கலாய்க்கிறார்கள். ஒரு நல்ல விஷயம் நடக்க இருக்கு. அது நடந்தா பெரிய பார்ட்டியே வச்சிடுறேன் என்கிறார்.
அரசி நடந்து செல்லுகிறார். வீட்டு வாசலில் கதிர் மற்றும் செந்தில் பேசிக்கொண்டு இருக்க இருக்கும் நிலைமை குறித்து பேசுகின்றனர். அரசியிடம் பேசுனீயா என செந்தில் கேட்க இல்லனா பாத்தேன். இப்ப கூட குமாருடன் வெளியில் போனா என்கிறார் கதிர். ஆப்போ கார் வர குமார் மட்டும் இறங்கி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
நான் போய் கேட்க போறேன் எனச் சொல்ல அவரை தடுக்கிறார் செந்தில். வீட்டில் உள்ளவர்கள் அரசி எங்க எனக் கேட்க என்னோட போனா என்னோட தான் வரணுமா என திமிராக பேசுகிறார். கதிர் அரசி குறித்து கேட்க போக அப்போ அரசி அங்கு நடந்து வருகிறார்.
பின்னர் அரசி வீட்டுக்குள் செல்ல அவரை பார்த்து குமார் அதிர்ச்சியாக நிற்கிறார். நான் தெரு ஓரத்தில் என் பள்ளி தோழியை பார்த்தேன் பேசிக்கிட்டு இருந்தேன் எனக் கூறி சமாளிக்கிறார். இதனால் குமார் கடுப்புடன் நிற்கிறார்.
